Mahalaya Amavasi Latest Updates: மகாளய அமாவாசை தினத்தில் எவ்வாறு வழிபாடு செய்வது, எவ்வாறு படையல் போடுவது, எவ்வாறு தீபம் ஏற்றுவது? எவ்வாறு தர்ப்பணம் செய்வது? மகாளய அமாவாசையின் சிறப்பு என்ன? போன்ற விவரங்கள் மற்றும் மகாளய அமாவாசை தினத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாளய அமாவாசை ஏன் சிறப்பு வாய்ந்தது?


12 மாதமும் அமாவாசை வருகிறது. ஆனால் சித்திரை மாதம், ஆடி மாதம், புரட்டாசி மாதம், தை மாதம் என் இந்த நான்கு மாதங்களில் வரக்கூடிய அமாவாசை தினத்தை சிறப்பாக குறிப்பிடுவார்கள். அதிலும் இந்த புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய இந்த மகாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது எனச் சொல்லுவார்கள். முன்னோர்களுக்கு வழிபாடுகளை செய்வதற்கு உரிய நாள்தான் இந்த மகாளய அமாவாசை.


மகாளய அமாவாசை அன்று செய்ய வேண்டியது என்ன?


அன்றைய தினத்துல காகத்துக்கு உணவு வைக்கிறதும் அல்லது மாட்டுக்கு அகத்திக் கீரை கொடுப்பதும் ரொம்ப சிறப்பு. இது எல்லாருமே செய்யக்கூடிய விஷயம்.


உங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள கோவில் அல்லது கடல், ஆறு இருக்கும் இடங்களுக்கு சென்று நமது முன்னோர்களுக்கு படையல் போட்டு வழிபாடு செய்து தர்ப்பணம் கொடுக்கலாம்.


மகாளய அமாவாசை தினத்தன்று உணவு, உடை, பணம் என ஏதாவது நம்மால் முடிந்த விஷயங்களை தானமாக செய்யலாம். 


வயது முதிர்ந்தவர்களுக்கு தானம் செய்யும் பொழுது பூரணமான பலன் நமக்கு கிடைக்கும்.


மாலை நேரத்தில் முன்னோர்களுடைய படத்தை வைத்து விளக்கேத்தி வழிபாடு செய்யலாம். 


அமாவாசை திதி


அமாவாசை திதி அக்டோபர் 1 இரவு 10:35க்கு ஆரம்பித்து மூன்றாம் தேதி நள்ளிரவு காலை 12:34 க்கு நிறைவடைகிறது. 


இந்த இடைப்பட்ட நேரத்தில் திருமூர்த்தி பகவானை வழிபாடு செய்தால் நமக்கு கை மேல பலன் கிடைக்கும்.


மகாளய அமாவாசை தர்ப்பணம்


நமது முன்னோர்களை நினைவு கூறக்கூடிய ஒரு அற்புதமான சமயம் தான் இந்த மகாளய அமாவாசையில் கொடுக்கக்கூடிய தர்ப்பணம்.


இந்த தர்ப்பணம் கொடுக்கும்போது நம்முடைய முன்னோர்கள் அனைவரையும் மனதில் நினைத்துக் கொண்டு, அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.


மகாளய அமாவாசை வழிபாடு


எந்த நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும் எனப் பார்த்தால், அக்டோபர் இரண்டாம் தேதி காலையில 6:00 மணியிலிருந்து 12 மணிக்குள் செய்தால் நல்லது. ஏனென்றால் சூரியன் இறங்கும் திசைக்கு வருவதற்கு முன்னால் தர்ப்பணம் கொடுப்பது நல்லது எனச் சொல்லுவார்கள். 


மகாளய அமாவாசை படையல்


மகாளய அமாவாசை அன்று படையல் போடும் நேரம் எனப் பார்த்தால் காலையில 11 மணிக்கு முதல் 12 மணி வரை செய்வது நல்லது. 


மகாளய அமாவாசை தீபம்


மகாளய அமாவாசை அன்று சிறந்த நேரமாகவும் கருதப்படும் மாலை 6:00 மணிக்கு மேல அகல் தீபம் ஏத்தி வழிபாடு செய்யலாம். 


வீட்டில் தினமும் பூஜை அறையில் ஏத்துற விளக்குகளை தவிர்த்து, புதுசா ஒரு அகழ் விளக்கு வாங்கி, அந்த அகல் விளக்கில் தீபம் ஏற்றி முன்னோர்களை வழிபாடு செய்வது நல்லது.


மேலும் படிக்க - மகாளய அமாவாசை 2024: கண்டிப்பா இதை செய்யுங்கள்.. முன்னோர்கள் ஆசி நிச்சயம்!


மேலும் படிக்க - பித்ரு பக்ஷ மகாளய அமாவாசை நவராத்திரி என களைகட்டும் வரும் வாரத்திற்கான ராசிபலன்! புரட்டாசி மூன்றாம் வாரம்!


மேலும் படிக்க - பித்ருக்களுக்கான திதியை மகாளய பட்சத்தின் எந்த நாளில் கொடுத்தால் என்ன பலன் கிடைக்கும்! ஆச்சரியமான உண்மை!


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ