Horoscope September 30 - October 6 : செப்டம்பர் 29 முதல் அக்டோபர் மாதம் ஆறாம் தேதி வரையிலான வரும் வாரம் 12 ராசிகளுக்கு எப்படி இருக்கும்? அறிவோம் ராசிபலன்....
பித்ரு பக்ஷத்தின் முக்கியமான நாளான மகாளய அமாவசை நாள் வரும் வாரம், முன்னோர்களுக்கான நீத்தார் கடன்களை கும்பிடுவதற்கு ஏற்றது என்பதைப் போல, நவராத்திரி தொடங்கவிருக்கும் வாரம் என்பதால் மிகவும் சிறப்பு வாய்ந்தது
அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்திற்கான ராசிபலன்களை தெரிந்துக் கொள்வோம். இந்த வாரம் முழுவதும் மாகாளய பட்சம், மாளய அமாவாசை, நவராத்திரி என இந்து மதத்தின் மிக முக்கியமான நாட்கள் வரும் காலம் இது...
மனதில் நினைத்த காரியங்கள் இழுத்துக் கொண்டே போகும். கவலைகள் அதிகரிக்கும், தொழிலிலும் போட்டி அதிகரிக்கும், ஆனால் விடாமுயற்சியே முக்கியமானது என்பதை உணரும் வாரம்...
அனைத்து விஷயங்களிலும் தாமதம் ஏற்படும், வேலைகள் எளிதில் முடியாமல் இழுத்துக் கொண்டே போவதால் சோர்வும் சலிப்பும் ஏற்படும். அலைச்சல் மிகுந்த வாரம் இது
எதிர்பாராத சில வாய்ப்புகள் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஆரோக்கியம் மேம்படும், சுப செலவுகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.. நிம்மதியாக வாழும் வாரம் இது
கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் முக்கியமான காலம் இது. நவராத்திரியில் அன்னை வழிபாடு வாழ்க்கையில் வளம் தரும். நல்ல காரியங்கள் கைகூடும்
நினைத்தது நிறைவேறும் வாரம் வரவிருக்கிறது கன்னி ராசியினரே.... கன்னியில் சூரியனும், புதனும் இருப்பதால் கன்னிக்கு அருமையான காலமாக இருக்கும்
துலாம் ராசி மாணவர்களுக்கு நல்ல காலம் இது. படிப்பில் கவனம் அக்கறை அதிகரிக்கும். மனதில் உள்ள கவலைகள் தொலைந்தோடும், புதிய நம்பிக்கை பிறக்கும்
தனுசு ராசிக்காரர்களுக்கு மனதில் மகிழ்ச்சி பொங்கும்படியான விஷயங்கள் நடந்தேறும், எதிர்பார்த்த விசயங்கள் எதிர்பார்த்ததைப் போலவே நடைபெறுவதால் மனம் நிறையும்
காரியத் தடை, பணவிரயம் என மனதை கவலை கொள்ள செய்யும் வாரம் இது. வாரத்தின் பிற்பகுதியில் அதாவது நவராத்திரியில் மனம் கொஞ்சம் நிம்மதியடையும்
மகர ராசிக்காரர்களுக்கு அருமையான வாரம் இது. அக்டோபர் முதல் வாழ்க்கையில் முக்கியமான விஷயங்கள் தொடர்ந்து நடந்தேறும். குழந்தைகளால் நிம்மதியும் அனுகூலமும் ஏற்படும்
கும்ப ராசியினருக்கு வரும் வாரம் முக்கியமானதாக இருக்கும். தொழில் வாழ்க்கை நன்றாக இருக்கும். முக்கியமான விஷயங்களை கவனமாக கையாண்டால், எல்லாம் நல்லபடியாக நடந்தேறும்
மீன ராசிக்காரர்களுக்கு சுபசெலவு அதிகரிக்கும். பணத்தட்டுப்பாடு நீங்கும், நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணவரவு வந்துசேரும்
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.