Mahashivratri 2024: மகாசிவராத்திரி அன்று சிவபெருமானை வழிபடுவது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நாளில் சிவன் பக்தர்கள் சிவனை வழிபட பல சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இந்த மஹாசிவராத்திரி நாளில் சிவலிங்கத்திற்குச் சில விசேஷங்களை செய்வது நல்லது. இதனால் சிவபெருமானின் அருளை நம்மால் பெற முடியும்.  இந்த ஆண்டு மார்ச் 8ம் தேதி வெள்ளிக்கிழமை மஹாசிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி நாளில் கொண்டாடப்படுகிறது. மஹாசிவராத்திரி அன்று சிவபெருமானை வழிபடும்போது என்னென்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மாசி மாதம் சதுர்த்தி சங்கஷ்டி சதுர்த்தி விரதம் விநாயகர் வழிபாடு


இந்து மதத்தில் மகாசிவராத்திரி பண்டிகைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இந்த நாளில் சிவபெருமானையும், பார்வதியையும் மக்கள் வழிபடப்படுகிறார்கள். மகாசிவராத்திரி அன்று சிவபெருமானை மகிழ்விக்க சிலர் தேன், பால், தயிர் போன்றவற்றை வழங்குகிறார்கள். சிலர் இரவு முழுவதும் சிறப்பு மந்திரங்களை உச்சரிக்கின்றனர். இது தவிர, மகாசிவராத்திரி நாளில் சிவலிங்கத்திற்கு நீராட்டுவதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது. மஹாசிவராத்திரி நாளில் சிவலிங்கத்திற்குச் சில விசேஷங்களைச் சமர்ப்பணம் செய்பவர்கள் சிவபெருமான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக ஐதீகம் உள்ளது. எனவே, மகாசிவராத்திரி அன்று சிவலிங்கத்திற்கு பின்வரும் இந்த 5 விஷயங்களை தானம் செய்யுங்கள்.


கடுகு எண்ணெய்: உங்கள் வியாபாரத்தில் அல்லது வேலையில் உங்களுக்கு தடங்கல்கள் இருந்து வந்தால், நீங்கள் அவரை அகற்ற விரும்பினால் மகாசிவராத்திரி அன்று சிவலிங்கத்தின் மீது கடுகு எண்ணெயை அர்ச்சனை செய்யுங்கள். இப்படி செய்வதன் மூலம் உங்கள் எதிரிகள் அனைவரையும் அழிந்துவிடுவார்கள். மேலும், உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீரும்.


தானியம்: உங்களது நீண்ட நாள் ஆசைகள் எதுவும் நிறைவேறாமல் இருந்தால், மகாசிவராத்திரி அன்று சிவலிங்கத்திற்கு தானியங்களை சமர்பிக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் நீண்ட நாள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். மேலும், உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு ஏற்படும்.


பருப்பு: பொதுவாக பருப்பு வகைகள் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. எனவே, சிவலிங்கத்திற்கு உளுத்தம்பருப்பை சமர்ப்பித்தால் மிகவும் மங்களகரமானது. இதன் மூலம், உங்கள் எல்லா கெட்ட வேலைகளும் சரியாகும்.  மேலும் உங்களது அதிர்ஷ்டமும் அதிகரிக்கும். 


கருப்பு உளுந்து: சிவ பெருமானை மகிழ்விக்க கருப்பு உளுந்து படைப்பது நல்லது. இதன் மூலம் சிவனின் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்கள் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். 


சிவப்பு பருப்பு: நீங்கள் நீண்ட நாட்களாக கடன் பிரச்சனைகளால் சிக்கி தவித்து வந்தால், சிவலிங்கத்திற்கு சிவராத்திரி அன்று அர்ச்சனை செய்யுங்கள்.  இது உங்கள் நிதி நிலையை மேம்படுத்தும் மற்றும் கடனில் இருந்து நீங்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)


மேலும் படிக்க | மகா சிவராத்திரியின் மகிமை! சிவனை எப்படி கும்பிட்டால் வரம் சித்திப்பார்? தெரிந்து கொள்வோம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ