குரு செவ்வாய் சேர்க்கை.. ஆகஸ்ட் வரை இந்த ராசிகளுக்கு கஷ்ட துஷ்ட காலம்
Jupiter and Mars Conjunction 2024: இன்னும் 3 நாட்களில் செவ்வாய் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார், இந்த ராசியில் குரு தற்போது பயணித்து வருகிறார். இதனால் வருகிற 12 ஆம் தேதி குரு செவ்வாய் சேர்க்கை நடைபெறும்.
Jupiter and Mars Conjunction 2024: இன்னும் 3 நாட்களில் அதாவது வருகிற ஜூலை 12 ஆம் தேதி செவ்வாய் கிரகம் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த ராசியில் ஏற்கனவே குரு இருக்கும் நிலையில் தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு மற்றும் செவ்வாய கிரகத்தின் சேர்க்கை நடைபெற இருக்கிறது. மேலும் இந்த சேர்க்கையானது வருகிற ஆகஸ்ட் மாதம் வரை இருக்கப் போகிறது. இந்த சேர்க்கையால் மிதுனம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்களுக்கு சுமாரான பலனையே தரும். இந்த ராசிக்காரர்களுக்கு நிதி, தொழில், குடும்ப வாழ்க்கையில் பல்வேறும் கஷ்டங்கள் வரும் என்பதால் இந்த ராசிக்காரர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இந்நிலையில் செவ்வாய் மற்றும் குரு கிரகத்தின் சேர்க்கையால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் அதிகர்க்கப் போகிறது என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்.
குரு செவ்வாய் சேர்க்கையால் ரிஷப ராசியினருக்கு பல்வேறு சவால்கள் அதிகரிக்கும்:
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் முதல் வீட்டில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த பயணத்தின் போது ரிஷப ராசிக்காரர்கள் பல கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த சவால்கள் குறுகிய காலமே நீடிக்கும் என்பதால் அச்சம் கொள்ள வேண்டாம். ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு நீங்கள் முன்னேற்றம் அடைவீர்கள். இது தவிர, செவ்வாய் உங்கள் ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்துவார். இதனால் அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். கூட்டுப் பணிகளிலும் தடைகளை சந்திக்க நேரிடும்.
மிதுன ராசியினருக்கு குரு செவ்வாய் சேர்க்கையால் செலவுகள் அதிகரிக்கும்:
மிதுன ராசிக்காரர்களுக்கு 12ம் வீட்டில் செவ்வாய் பெயர்ச்சி அடையப் போகிறார். அத்தகைய சூழ்நிலையில், மிதுன ராசிக்காரர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். சுகாதாரத் துறையில் பணிபுரிபவர்கள், வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள் செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கத்தால் பிரச்சினைகள் சந்திக்க நேரிடலாம். அதுமட்டுமின்றி இந்த ராசிக்காரர்களுக்கு தொடர்ந்து செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மோதல்கள் ஏற்படலாம்.
துலாம் ராசிக்காரர்களுக்கு குரு செவ்வாய் சேர்க்கையால் நிதி தட்டுப்பாடு அதிகரிக்கும்:
துலாம் ராசிக்காரர்களுக்கு 8ம் வீட்டில் செவ்வாய் பெயர்ச்சி அடையப் போகிறார். அத்தகைய சூழ்நிலையில், உடல்நிலையில் பிரச்சனை ஏற்படும், இதனால் மருத்துவமனைக்குச் செலவுகள் அதிகக்கும். இதனால் நிதி நிலை மோசமடையலாம். எனவே, முடிந்த வரை வீண் செலவைத் தவிர்க்கவும். கடன் கொடுக்க வேண்டாம். சமய காரியங்களில் ஆர்வம் குறையலாம்.
கும்ப ராசிக்காரர்கள் குரு செவ்வாய் சேர்க்கையால் கஷ்டங்கள் ஏற்படும்:
கும்ப ராசிக்காரர்களுக்கு நான்காம் வீட்டில் செவ்வாய் பெயர்ச்சி நடக்கப் போகிறது. அப்படிப்பட்ட நிலையில் செவ்வாயின் 10ம் வீட்டின் பார்வை கும்ப ராசியில் இருக்கும். இந்த காலக்கட்டத்தில் அபாயங்கள் ஏற்படலாம். வாகனத்தை கவனத்துடன் ஓட்ட வேண்டும். எதிர்பாராத விபத்துகள் ஏற்படலாம். தொழிலால் மன அழுத்தம் ஏற்படலாம். நிதி இழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. திடீர் செலவுகள் வரலாம்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ