ஆடி மாதம் அட்டகாசமான அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்! சூரிய பெயர்ச்சி பலன்கள்!

Sun Tranist July 17 In Cancer Zodiac : மாதம் ஒரு முறை தனது ராசி இருப்பிடத்தை மாற்றும் சூரிய பகவான், இந்த மாதம் 17ம் தேதியன்று மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். சூரியனின் சஞ்சார மாற்றம் நிகழும் நாள், தமிழ் மாத பிறப்பாக கணக்கிடப்படுகிறது

குரோதி தமிழ் ஆண்டில் ஆடி மாதத்தை உருவாக்கும் சூரிய பெயர்ச்சி அடுத்த ஒரு மாதத்திற்கு 12 ராசிகளின் வாழ்க்கையில் சிலபல மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த ஆண்டு ஆடி மாதத்தில் மகிழ்ச்சியில் துள்ளி சந்தோசப்படப்போகும் ராசிகளில் உங்களுடையதும் உள்ளதா? அறிந்துக் கொள்வோம்... 

1 /8

இன்னும் சில நாட்களில், அதாவது ஜூலை மாதம் 17ம் நாளன்று சூரியன் மிதுன ராசியிலிருந்து கடக ராசியில் பெயர்ச்சியாவார். சூரியன் பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு நிம்மதி கிடைக்கும்.   அதிர்ஷ்டத்தின் முழுமையான பலன்களைப் பெற்ரு மகிழ்ச்சியடையும் அதிர்ஷ்ட ராசிகள் இவை...

2 /8

நிதி நிலைமை மேம்படுவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு மனதில் நிம்மதி ஏற்படும், கடன் தொல்லைகள் நீங்கும். வீடு, வாகனம் வாங்குவது பற்றிய சிந்தனைகள் மேலோங்கும், சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும் என்பதால் இந்த மாத சூரிய பெயர்ச்சியின் அதிகமான பலன்களை மேஷ ராசியினர் அனுபவிப்பார்கள் 

3 /8

மிதுன ராசியின் அதிபதி புதன், அறிவுக்காரகரின் வீடான மிதுன ராசியினருக்கு சூரியன் பெயர்ச்சி சுப பலன்களைக் கொடுக்கும். கல்வியில் இருந்து வந்த தடைகளும் மனக்குழப்பங்களும் விலகும், மனதில் நிம்மதியும், உற்சாகமும் பெருகும். பிறருக்கு உதவும் மனப்பான்மை அதிகரிக்கும்

4 /8

கடகத்தில் சூரியன் சஞ்சரிக்கும் இந்த ஆடி மாதம் முழுவதுமே கடக ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கும், தொட்டது துலங்கும். ஆலயங்களுக்கு சென்று திருப்தியாக வழிபடும் பாக்கியம் கிடைக்கும். பிறருக்கு உதவும் வாய்ப்புகள் ஏற்படும். பிறரின் வாழ்த்துக்களால் மனம் நிரம்பி, திருப்தியாக உணரும் மாதம் இது

5 /8

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதம் அற்புதமான மாதமாக இருக்கும். மனதில் இருந்த கவலைகளுக்கு டாட்டா சொல்லிவிட்டு, உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் நிகழும். தவறானவர்களின் நட்பு விலகும், நல்லவர்களை அடையாளம் கண்டறியும் திறமை உண்டாகும், பண வரவு மட்டுமா நிம்மதி கொடுக்கும்? மன பக்குவமும் அமைதியைக் கொடுக்கும் என்பதை உணர்த்தும் சூரிய பெயர்ச்சி இது

6 /8

கன்னி ராசியினருக்கு ஆடி மாத சூரியப் பெயர்ச்சி நல்லதை செய்யும். வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள், ஆன்மீக பயணத்திற்கு வாய்ப்பு உண்டு. பிறருக்கு உதவி அதன் பலன்களை உணர்வீர்கள், மனதில் நெகிழ்ச்சி ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று உங்கள் மனதையே மாற்றும்

7 /8

கடந்த சில மாதங்களாக இருந்துவந்த நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆடி மாத சூரிய பெயர்ச்சி ஜூலை 17ம் நாளன்று நடைபெறவிருக்கிறது. இனி மனக்கவலைகளை ஒதுக்கி வைத்து விட்டு நிம்மதியாக இருக்கலாம். தானம் செய்யும் வாய்ப்புகளை தவறவிட வேண்டாம். குடும்பத்தில் சுப காரியம் ஒன்று நடைபெறும்

8 /8

பொறுப்புத் துறப்பு: இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களை ஜீ நியூஸ் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை