புதிய ஆண்டு 2023 தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளது. அதன்படி இந்த புத்தாண்டு நமக்கு எப்படி இருக்கும் என்பதே அனைவரின் கேள்வியாகும். கடந்த வருடத்தில் நிறைவேற்ற முடியாத ஆசைகள் வரும் வருடத்தில் நிறைவேறுமா இல்லையா. நல்ல வேலை கிடைக்குமா, கிடைக்காதா? வியாபாரத்தில் என்ன மாதிரியான வெற்றி கிடைக்கும், எவ்வளவு லாபம் கிடைக்கும், வியாபாரத்தை விரிவுபடுத்த முடியுமா முடியாதா, பொருளாதார நிலை எப்படி இருக்கும் போன்ற கேள்விகள் அனைவரின் மனதிலும் இருக்கும். எனவே வரும் 2023-ம் ஆண்டின் பொருளாதார நிலை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்: பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி வேகமாக அழைத்துச் செல்லும். நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். இது தவிர, தொழில் ரீதியாக வரும் ஆண்டு சிறப்பாக இருக்கும். 


ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு 2023-ம் ஆண்டு கலக்கலாக இருக்கும். பண ஆதாயத்திற்கு நீங்கள் கடினமாக உழைக்க வேண்டி வரும். செலவுகள் பெருமளவில் அதிகரிக்கும். நிதி ரீதியாக, 2023 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்காது. பணத் தட்டுப்பாடு வரலாம்.


மேலும் படிக்க | 30 ஆண்டுக்குப் பிறகு கும்ப ராசியில் சனிப்பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு சிக்கல்


மிதுனம்: தொழிலில் நஷ்டம் ஏற்படும் அறிகுறிகள் தென்படும். ஆண்டின் தொடக்கத்தில் சில நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.


கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு 2023 புத்தாண்டு மிகவும் சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் பல முக்கியமான மாற்றங்களைக் காணலாம். ரியல் எஸ்டேட் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.


சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். பணம் சம்பாதிக்க ஒன்றுக்கு மேற்பட்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். முதலீடு தொடர்பான பணிகளுக்கு இந்த ஆண்டு உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். ஆனால் உங்கள் உடல்நலம் மற்றும் உங்கள் மனைவியுடனான உறவில் சரிவைக் காணலாம்.


கன்னி: உத்தியோகத்தில் இருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு பல வாய்ப்புகள் அமையும். விரும்பிய வேலை கிடைக்க நல்ல வாய்ப்புகள் உள்ளன. வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். இந்த ஆண்டு நீங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம், இது உங்கள் செல்வத்தை அதிகரிக்கும்.


துலாம்: வியாபாரத்தில் லாபம் தரும் ஆண்டாக இருக்கும். புதிதாக தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு 2023-ம் ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும்.


விருச்சிகம்: எந்தவொரு பெரிய நிதி முடிவையும் கவனமாக பரிசீலித்த பின்னரே எடுக்க வேண்டும், இல்லையெனில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். ஆண்டின் மத்தியில் நல்ல வருமானம் கிடைக்கும். குடும்பத்தின் ஆதரவுடன், பல திட்டங்களைத் தொடங்கலாம், இது பொருளாதாரக் கண்ணோட்டத்தில் ஒரு நல்ல அறிகுறியாகும்.


தனுசு: தனுசு ராசிக்காரர்கள் ஆண்டு முழுவதும் வெற்றி பெறுவார்கள். உத்தியோகத்தில் நல்ல வளர்ச்சிக்கு வாய்ப்பு உண்டு. வருமானத்தில் உயர்வு இருக்கும். திடீர் லாபமும் பணமும் கிடைக்கும்.


மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு 2023-ம் ஆண்டு கவலைகள் நிறைந்ததாக இருக்கும். வருமானத்தில் பிரச்சனைகள் வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உத்தியோகத்தில் ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும்.


கும்பம்: 2023 ஆம் ஆண்டில், உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஆண்டின் ஆரம்பம் நன்றாக இருக்கும். வணிகர்கள் பெரும் லாபகரமான ஒப்பந்தத்தைப் பெறலாம்.


மீனம்: 2023 ஆண்டு நிதி சிக்கல்கள் நிறைந்ததாக இருக்கலாம். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. முதலீடு தொடர்பான முடிவுகள் உங்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | டிசம்பரில் இந்த ராசிகள் மீது சனியின் நேரடி தாக்கம்: அதிகபட்ச எச்சரிக்கை தேவை 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ