சனிப்பெயர்ச்சியால் உருவாகும் ஷஷ ராஜயோகம்: 4 ராசிகளுக்கு ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி

Sani Peyarchi 2023: சனிப் பெயர்ச்சியால் உருவாகும் ஷஷ ராஜயோகம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தரும். இவர்களுக்கு வேலை-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அதிகப்படியான பண வரவு இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 3, 2022, 12:27 PM IST
  • சனி பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்.
  • இதுவரை அதிர்ஷ்டம் இல்லாததால் ஏற்பட்ட தடைகள் நீங்கும்.
  • தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் விரைவான வெற்றி இருக்கும்.
சனிப்பெயர்ச்சியால் உருவாகும் ஷஷ ராஜயோகம்: 4 ராசிகளுக்கு ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி

சனிப்பெயர்ச்சி 2023, ஷஷ ராஜயோகம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஜனவரி 17, 2023 அன்று சனி கிரகம் தனது ராசியை மாற்றி தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழையப் போகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி கும்ப ராசிக்கு மாறி 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். மார்ச் 29, 2025 வரை சனி கும்ப ராசியில் இருப்பார். சனி தனது ராசியை மாற்றி கும்பத்தில் நுழைவதால் ஷஷ ராஜயோகம் உருவாகவுள்ளது. பஞ்ச மகாபுருஷ் ராஜயோகத்தில், ஷஷ யோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. 

சனிப் பெயர்ச்சியால் உருவாகும் இந்த ஷஷ ராஜயோகம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தரும். இவர்களுக்கு வேலை-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அதிகப்படியான பண வரவு இருக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி மிகவும் சாதகமாக அமையும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

இந்த ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சியால் அபரிமிதமான நல்ல பலன்கள் கிடைக்கும்:

கும்ப ராசியில் சனி நுழைவதால் உருவாகும் ஷஷ ராஜயோகம் 4 ராசிகளைச் சேர்ந்தவர்களின் அதிர்ஷ்டத்தை பன்மடங்காக அதிகரிக்கும். ஜனவரி 17, 2023 முதல், இந்த நபர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். 

மேலும் படிக்க | புத்தாண்டு ராசிபலன்: 2023-ல் ராஜயோகத்தை அனுபவிக்கவுள்ள ராசிகள் இவைதான் 

ரிஷபம்:

சனி பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். இதுவரை அதிர்ஷ்டம் இல்லாததால் ஏற்பட்ட தடைகள் நீங்கும். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் விரைவான வெற்றி இருக்கும். தொழிலில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

மிதுனம்: 

சனியின் ராசி மாற்றத்தால் மிதுன ராசியில் சனியின் சஞ்சலம் முடிவடையும். சனி தசையினால் வாழ்வில் இருந்த தொல்லைகள், பிரச்சனைகள் நீங்கும். மன அழுத்தத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.

துலாம்: 

ஜனவரி 17 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி ஆனவுடன் துலாம் ராசியிலும் ஏழரை நாட்டு சனி முடிவடையும். இத்தனை நாட்களாக தடைப்பட்டிருந்த பணிகள் தானாகவே தொடங்கும். வாழ்வின் பிரச்சனைகள் தீரும். பெரும் முன்னேற்றம் ஏற்படும். பண வரவு சாதகமாக இருக்கும். மன மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்கும்.

தனுசு: 

கும்ப ராசியில் சனியின் பிரவேசம் தனுசு ராசிக்காரர்களை ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து விடுவிக்கும். சனியால் நீங்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் விலகும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வேலையில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு உங்களுக்கு கிடைகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | டிசம்பரில் இந்த ராசிகள் மீது சனியின் நேரடி தாக்கம்: அதிகபட்ச எச்சரிக்கை தேவை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

More Stories

Trending News