30 ஆண்டுக்குப் பிறகு கும்ப ராசியில் சனிப்பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு சிக்கல்

Saturn Transit in Aquarius After 30 Years: ஜனவரி 17, 2023 அன்று சனி கும்ப ராசியில் இடப் பெயர்ச்சியாகப் போகிறார். இதனால் 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 5, 2022, 10:29 AM IST
  • சனிப்பெயர்ச்சி 2023.
  • 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் இடப் பெயர்ச்சி.
  • 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
30 ஆண்டுக்குப் பிறகு கும்ப ராசியில் சனிப்பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு சிக்கல் title=

சனிப்பெயர்ச்சி 2023: வேத ஜோதிட சாஸ்திரத்தில் சனி கிரகத்தை மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக கருதப்படுகிறது. பொதுவாக சனி ஒரு ராசியில் பெயர்ச்சியாக சுமார் இரண்டரை வருடங்கள் ஆகிறது. அதேபோல் சனிக்கு கர்மா மற்றும் லாபத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அரசியல், மர்மம், சுரங்கம், தந்திரம், அமானுஷ்யம், எண்ணெய், தாதுக்கள் ஆகியவற்றின் காரணியாகவும் சனி கருதப்படுகிறது. எனவே வருகிற ஜனவரி 17, 2023 அன்று, சுமார் 3 தசாப்தங்களுக்குப் பிறகு சனி கும்ப ராசியில் இடப் பெயர்ச்சியாகப் போகிறார். இதன் போது 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவை எந்த ராசிக்காரர்கள் என்பதை இங்கே காண்போம்.

கடக ராசி: உங்கள் ராசிக்கு சனி பகவான் எட்டாம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். இதனால் அஷ்டமத்து சனி காலம் ஏற்படும். இதனால் சனி உங்களை ஆட்டி படைப்பார். மேலும் சனி பகவான் எட்டாம் வீட்டில் பயணம் செய்து விபரீத ராஜ யோகத்தை தருவார். எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்று அமரும் சனி பகவான் சில துன்பங்களை தருவார். வேலை செய்யும் இடத்தில் கடினமாக உழைக்க வேண்டும். கடனாக கொடுக்கப்பட்ட பணம் சிக்கிக்கொள்ளலாம். சனி பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு பத்து, இரண்டு, 5ஆம் வீடுகளின் மீது விழுகிறது. பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள் வந்து போகும்.

மேலும் படிக்க | புத்தாண்டு ராசிபலன்: 2023-ல் ராஜயோகத்தை அனுபவிக்கவுள்ள ராசிகள் இவைதான் 

சிம்ம ராசி: உங்கள் ராசிக்கு சனி பகவான் ஏழாம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். இந்த நேரத்தில், சனியின் சஞ்சாரத்தால், திருமண வாழ்க்கையில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். காதலர்களுக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக மனக்கசப்பு ஏற்படும். இந்த நேரத்தில் மனைவியின் உடல்நிலையில் அக்கறை காட்ட வேண்டும். சனியின் சஞ்சாரத்தின் தாக்கத்தால் உங்கள் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். இந்த நேரத்தில், நீங்கள் வியாபாரம் செய்தால், உங்களுக்கு கீழ் உள்ள ஊழியர்களை அவமதிக்காதீர்கள். சோம்பலைக் கைவிட்டு, இலக்கை முழுமையாக அடைவதை நோக்கிச் செல்ல வேண்டும்.

விருச்சிக ராசி: உங்கள் ராசிக்கு சனி பகவான் மூன்றாம் மற்றும் நான்காம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் குடும்பத்தில் முரண்பாடுகளுக்கு காரணமாக இருக்கலாம். மன உளைச்சல் ஏற்படும். தாயின் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சொத்து வாங்கும் விஷயத்தில் உங்கள் பணம் சிக்கிக்கொள்ளலாம், எனவே நண்பர்களை நம்ப வேண்டாம். உங்களின் பொருட்கள் திருடப்படலாம். இந்த நேரத்தில் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். 

மீன ராசி: உங்கள் ராசிக்கு சனி பகவான் பதினோராம் மற்றும் பன்னிரண்டாம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். இந்த சனிப் பெயர்ச்சியால் வீண் செலவுகள் ஏற்படும். பழைய நீதிமன்ற வழக்கு காரணமாக நீதிமன்ற வழக்குகளில் சிக்கிக் கொள்ளலாம். அதிகப்படியான பணச் செலவுகளால் பணப் பற்றாக்குறை ஏற்படும். குடும்பத்தில் தகராறு ஏற்படலாம். சோர்வாக உணரலாம். சில பழைய நோய்களால் நீங்கள் மீண்டும் சிரமப்படுவீர்கள். அரசுப் பணிகளுக்குத் தயாராகும் நபர்கள் இந்தப் பயணத்தின் போது இடையூறுகளைச் சந்திக்க நேரிடும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | டிசம்பரில் இந்த ராசிகள் மீது சனியின் நேரடி தாக்கம்: அதிகபட்ச எச்சரிக்கை தேவை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News