மீனத்தில் சங்கமித்த 3 கிரகங்கள்..! செல்வமழை எதிர்கொள்ளபோக்கும் 3 அதிர்ஷ்ட ராசிகள்
ஜோதிட கணிப்பின்படி இம்மாதம் அரிதான மாதமாகும். சூரியன், புதன் மற்றும் குரு போன்ற சக்தி வாய்ந்த கிரகங்கள் மீனத்தில் ஒன்றாக சங்கமித்துள்ளன. இதனால் 3 ராசிக்காரர்களுக்கு வேலை-வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் கிடைக்கும்.
ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது, அது 12 ராசிகளையும் பாதிக்கும் என்று வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. மறுபுறம், ஒன்றுக்கு மேற்பட்ட சக்திவாய்ந்த கிரகங்கள் ஒரே ராசியில் கூடினால், அரிதினும் அரிதான சாதக பாதகங்கள் இருக்கும். செல்வம் கிடைத்தாலும் மூன்று மடங்காக கிடைக்கும். அனுபவம் கிடைத்தாலும் இதுவரை இல்லாத அளவுக்கானதாக இருக்கும்.
இப்போது கிரகங்களின் ராஜாவான சூரியன், இளவரசர் புதன் மற்றும் தேவகுரு வியாழன் ஆகியோர் 16 மார்ச் 2023 முதல் மீனத்தில் ஒன்றாகச் சங்கமித்துவிட்டார்கள். இந்த 3 சக்தி வாய்ந்த கிரகங்களின் சேர்க்கை அனைத்து ராசிகளிலும் சாதகமான விளைவை ஏற்படுத்தப் போகிறது. குறிப்பாக 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் திறக்கப் போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று பார்ப்போம்.
விருச்சிகம்
சூரியன், புதன் மற்றும் குருவின் இந்த சேர்க்கை (சூரிய புத் குரு யுதி 2023) உங்களுக்கு சிறந்த பலன்களைத் தரும். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறலாம். சமூகத்தில் உங்களின் மதிப்பு உயரும். எங்கிருந்தோ திடீரென்று பணம் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்கள் முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும்.
மிதுனம்
உங்கள் ஜாதகத்தில் புதன் ஒரு சுப இடத்தில் இருக்கிறார். இதன் காரணமாக, உங்கள் வணிகத்தில் மிகப்பெரிய லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. அறிவு-அறிவியல், கல்வி, வக்கீல் அல்லது மருத்துவத் தொழிலுடன் தொடர்புடையவர்களுக்கு, வரும் நேரம் மங்களகரமானதாக இருக்கும். அரசு வேலை செய்பவர்கள் முன்னேறலாம். சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
ரிஷபம்
இந்த ராசிக்காரர்கள் (சூரிய புத் குரு யுதி 2023) செல்வாக்கு மிக்கவர்களுடன் தொடர்பு கொள்வார்கள், இதன் காரணமாக நீங்கள் நல்ல பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு பெரிய ஒப்பந்தம் முடிவடையும். நீங்கள் மூதாதையர் சொத்துக்களைப் பெறலாம் அல்லது ஏதேனும் வாகனம்-சொத்து வீட்டிற்கு வரலாம். நீங்கள் பணியிடத்தில் புதிய பொறுப்பு அல்லது பதவி உயர்வு பெறலாம்.
மேலும் படிக்க | 700 ஆண்டுகள் கழித்து உருவான பஞ்ச மஹாயோகம்: இந்த ராசிகளுக்கு அசத்தலான ராஜயோகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ