பித்ரு பக்ஷ சூரிய பெயர்ச்சியால் நிம்மதியை இழக்கும் ராசிக்காரர்கள்! உங்களுடைய ராசி எது?
Sun Transit In Virgo Rasipalan : மாதந்தோறும் ராசியை மாற்றும் சூரியன், இந்த மாதம் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார், இது யாருக்கு சாதகம் எவருக்கு பாதகம்? தெரிந்துக் கொள்வோம்...
Sun Transit In Virgo : செப்டம்பர் 16, 2024 மாலை சுமார் ஏழரை மணிக்கு சிம்ம ராசியில் இருந்து சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்கவிருக்கிறார். ஆற்றலின் முக்கிய ஆதாரமான சூரியனை சுற்றியே பிற கிரகங்களும் இயங்குகின்றன. அதிலும் கன்னி ராசியில் சூரியன் இருக்கும் புரட்டாசி மாதம் ஆன்மீக ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
கன்னியில் சூரியன் மாறியதுமே புரட்டாசி மாதம் தொடங்கிவிடுகிறது. புரட்டாசி மாதத்தில், நமது முன்னோர்களுக்கான தர்ப்பணம் சிராத்தம் போன்ற கடமைகளை செய்ய வேண்டும் என்பது இந்து மத நம்பிக்கை. ஒரு காலத்தில் மிகவும் தீவிரமாக பார்க்கப்பட்ட இந்த ஐதீகங்கள், இன்று காலத்திற்கு ஏற்றாற்போல பல பரிணாமங்களை அடைந்துவிட்டது.
புரட்டாசி மாதத்தில், பித்ரு பக்ஷத்தில் நமது குடும்பத்து முன்னோர்களை வணங்கி ஆசி பெற்ற பிறகு, இறை வழிபாட்டிற்கான நவராத்திரி தொடங்கிவிடும். ஒட்டுமொத்தமாக பார்க்கப்போனால், சூரியனின் கன்னி ராசி சஞ்சாரம் நமது வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மறுக்க முடியாது.
சூரியன், வழக்கமாக மாதந்தோறும் மாறிக் கொண்டே இருக்கிறார். அந்த வகையில், செப்டம்பர் மாதம் 16ம் தேதியன்று கன்னிக்கு மாறும் சூரியனின் பெயர்ச்சியால் உருவாகும் புரட்டாசி மாதம் 4 ராசிகளுக்கு மிகவும் கவலையை கொடுக்கக்கூடியதாக இருக்கும்.
மேலும் படிக்க | ஆவணியை முடித்து வைத்து புராட்டாசியை வரவேற்கும் வார ராசிபலன்கள்! அதிர்ஷ்டம் யாருக்கு எப்படி?
கன்னியில் சூரியன் சஞ்சாரம்
ரிஷபம் (Taurus Zodiac Sign): சிம்மத்தில் இருந்து கன்னிக்கு மாறும் சூரியனின் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு கவலையை அதிகரிக்கும், தொழிலில் முடக்கம், வேலையாட்களால் பிரச்சனை, வர வேண்டிய பணம் வராமல் இழுத்தடிப்பது என பிரச்சனைகள் சூழும். எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் பிரச்சனைகள் அதிகரிக்கும். முதலீடுகள் செய்வதை கவனமுடன் செய்யாவிட்டால் பிரச்சனைகள் அதிகரிக்கும். கன்னியில் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தில் ஆரோக்கியத்திற்கு கவனம் கொடுக்காவிட்டால் பிரச்சனைகள் அதிகமாகும்.
விருச்சிகம் (Scorpio Zodiac Sign) : விருச்சிக ராசியினர், கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும்போது, சூரிய வழிபாடு மேற்கொள்வது நல்லது. ஏனென்றால், இந்த புரட்டாசி மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கவலையை அதிகரிக்கும் காலகட்டமாக இருக்கும். நீண்ட கால முயற்சிகளில் திடீரென மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கலாம். குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இருக்கும் என்பது தான் ஆறுதாஅக இருக்கும். ஆனால், கூட்டுக் குடும்பத்தில் விரிசல் ஏற்படலாம்.
கும்பம் (Aquarius Zodiac Sign) : கன்னி ராசியில் சூரியன் இருக்கும் ஒரு மாத காலமும் கும்ப ராசிக்காரர்களுக்கு மோசமான காலமாக இருக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடியாததால், குடும்பத்தினரின் அதிருப்தியையும் சமாளிக்க வேண்டியிருக்கும். தொழில்ரீதியில், இலக்குகளை அடைவதில் தாமதம் ஏற்படும். கவனமாக இருந்தால் கவலைகளை குறைத்துக் கொள்ளலாம்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | கன்னியில் அஸ்தமாகும் புதன் மகிழ்ச்சியையும் அஸ்தமாக்கிவிடுவார்! உஷாராக இருக்க வேண்டிய ராசிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ