சொந்த வீட்டிற்குக் குடியேறப்போகும் சூரியன்! ஆசியை ‘நாலு’ ராசிகளுக்கு அள்ளி வழங்கும் சூரியப் பெயர்ச்சி!

Sun Transit August 16 : சுதந்திர தினத்திற்கு அடுத்த நாள் நடைபெறும் சூரியனின் பெயர்ச்சி!குரோதி ஆவணி மாதத்தில் சுகமாக வாழப்போகும் ராசிகளுக்கான ராசிபலன்...

1 /8

சூரியன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு நாளை பெயர்ச்சியாகப் போகிறார். கிரகங்களின் ராஜாவான சூரியன் ஓராண்டுக்கு பிறகு தனது சொந்த வீட்டிற்கு வருகிறார். இது ஒரு பெரிய ஜோதிட கிரக மாற்றம் ஆகும்.  

2 /8

சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நுழையும் போது அதனை சங்கராந்தி என்று அழைக்கின்றனர். 2024 ஆகஸ்ட் 16 அன்று சிம்மத்தில் சூரியன் நுழைவதை சிம்ம சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது.

3 /8

சூரியன் சிம்ம ராசியில் 1 மாதம் இருப்பார். சூரியனின் இந்த ராசி மாற்றம், 4 ராசிக்காரர்களுக்கு எல்லா துக்கங்கள் மற்றும் பிரச்சனைகளில் இருந்து விடுதலை அளிக்கும். தொழிலில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளையும் தரும்.

4 /8

சிம்ம ராசியில் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15ம் தேதி வரை சஞ்சரிக்கும் சூரியனின் சஞ்சாரக் காலமான 30 நாட்களும் மகிழ்ச்சியாக இருக்கப்போகும் அந்த ‘நாலு’ ராசிக்காரர்கள் யார்? தெரிந்துக் கொள்வோம்

5 /8

சிம்ம ராசிக்கு அதிபதியான சூரியன் 11 மாதங்களுக்குப் பிறகு, தனது சொந்த வீட்டிற்குள் நுழைகிறார். சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி, நற்பலன்களைத் தரும். அரசியலில் ஈடுபடுபட்டுள்ளவர்களுக்கு சாதகமான காலம் இது. நிலுவையில் உள்ள பணிகள் முடிவடைவதால் திருப்தியும், தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கொடுக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியைத் தரும்

6 /8

கடக ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய சஞ்சாரம் மிகவும் சுப பலன்களைத் தரும். பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். பொருளாதார நிலை வலுப்பெறும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

7 /8

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் மிகவும் அருமையானதாக இருக்கும். தொழில் துறையில் வெற்றி, வியாபாரத்தில் லாபம் என மகிழ்ச்சி பொங்கும். தொழிலை விரிவுபடுத்த திட்டமிடலாம். வராமல் இருந்த பணம் வந்து சேரும்  

8 /8

துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் வருமானத்தை அதிகரிக்கும். பல வழிகளில் பணம் வந்து சேரும். வாழ்க்கையில் எல்லாப் பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். முதலீடு செய்வதற்கு ஏற்ற காலம். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்