ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் சில நேரத்தில் ராசியை மாற்றும்போது, அனைத்து ராசியினருக்கும் வெவ்வேறு விதமான பலன்கள் ஏற்படும். நவகிரகங்களில், சனி மிக மெதுவாகவும், சந்திரன் மிக வேகமாகவும் ராசியை மாற்றும் கிரகங்கள் ஆகும். சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ராசியை மாற்றுகிறார், சந்திரன் இரண்டரை முதல் மூன்று நாட்களில் மாறுகிறார். ஜனவரி 17 அன்று, சனி அதன் அசல் முக்கோண ராசியான கும்பத்தை அடைந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சந்திரனும் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் நிலையில், ஏற்கனவே இங்கு சனீஸ்வரரும் இருப்பதால் ஏற்படும் விஷ யோகம், அனைத்து ராசிக்காரர்களுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். விஷ யோகம் ஜோதிடத்தில் நல்லதாகக் கருதப்படுவதில்லை, ஏனெனில் விஷ யோகம் பல வழிகளில் தீங்கு விளைவிக்கும். தற்போது கும்ப ராசியில் உருவாகும் விஷ யோகம் 3 ராசிக்காரர்களுக்கு அசுபமானது.


மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு உருவாகும் திரிகிரஹி யோகம்! யாருக்கு பாதிப்பு? யாருக்கு சுபம்


விஷ யோகம் இவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்
  
கும்ப ராசியில் சனியும் சந்திரனும் இணைந்து உருவாகும் விஷ யோகம் 3 ராசிக்காரர்களுக்கு அசுபமானது. இவர்களுக்கு பண இழப்பு உள்ளிட்ட பிற இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அடுத்த 3 நாட்களுக்கு இவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
 
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு விஷ யோகம் நல்லதல்ல. உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.பேசும்போது கவனமாக இருங்கள், இல்லையெனில் சண்டை ஏற்படலாம். புதிய வேலைகளைத் தொடங்காமல் இருப்பது நல்லது. மன உளைச்சல் ஏற்படும். சிவன் மற்றும் சனி தேவரை வழிபட நிம்மதி கிடைக்கும்.



கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு விஷ யோகம் நல்லதல்ல. சச்சரவுகள் அதிகமாகும். நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தால், அந்த வழக்கு உங்களுக்கு எதிராக செல்லலாம். பயணத்தின் போது உங்களின் உடமைகளை பாதுகாப்பாக கவனித்துக் கொள்ளுங்கள். தொழில் செய்பவர்கள், கவனமாக செய்ய வேண்டும், இல்லையெனில் பண இழப்பு ஏற்படலாம்.


மீனம்: சனி மற்றும் சந்திரன் சேர்க்கையால் உருவாகும் விஷ யோகத்தின் போது மீன ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் சேதம் ஏற்படலாம். செலவுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும். புதிய வேலையைத் தொடங்க வேண்டாம்.


முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். பணியிடத்தில் அலட்சியமாக இருக்கக்கூடாது. உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். கூட்டாண்மையில் வேலையைத் தொடங்குவதைத் தவிர்க்கவும்.  நேரம் சாதகமாக இருக்கும்போது வேலையைத் தொடரவும். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது  உங்களுக்கு தற்போது தேவையான ஒன்று.


மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சியால் ஏழரை சனியில் சிக்கவுள்ள ராசிகள் இவை: நிவாரணம் காண பரிகாரங்கள் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ