சனி வக்ர பெயர்ச்சி 2023: ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றிக்கொண்டே இருக்கும். அதேபோல் சில கிரகம் உதயமாகும், அஸ்தமனமாகும் மற்றும் பின் நோக்கி நகரும். அதன்படி சனி கிரகம் அனைத்து கிரகங்களிலும் மெதுவாக நகரும் கிரகமாக கருதப்படுகிறது. சனி ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி அடைய சுமார் இரண்டரை வருடங்கள் ஆகும். அந்த வகையில் கடந்த ஜனவரியில் சனி கும்பத்தில் இடப்பெயர்ச்சி அடைந்தார். தற்போது வருகிற ஜூன் 17 ஆம் தேதி  கும்ப ராசியில் நேரான இயக்கத்தில் உள்ளார். ஜூன் 17, 2023 முதல், சனி வக்ர நிலையில் மாறத் தொடங்குவார். சனி கும்ப ராசியில் வக்ர நிலையில் நவம்பர் 4 வரை இருப்பார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு கிரகம் பின்னோக்கி செல்லும் போதெல்லாம், அதன் விளைவு பன்மடங்கு அதிகரிக்கிறது. இந்த நிலையில், எந்த கிரகமும் எதிர் திசையில் நகரும். சனி 139 நாட்களுக்கு வக்ர நிலையில் நகரும். அப்படிப்பட்ட நிலையில் இந்த 3 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அவர்களின் செல்வம் அபரிமிதமாக உயரும் வாய்ப்புகள் உள்ளன. இந்த ராசிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | சனி சுக்கிரன் சேர்க்கை: நவபஞ்சம ராஜயோகத்தால் இந்த ராசிகளுக்கு திகட்ட திகட்ட வெற்றி


தனுசு ராசி
ஜோதிட சாஸ்திரத்தின் படி சனியின் வக்ர பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன் தரும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் பெயர்ச்சி அடையப் போகிறார் மற்றும் சனி இங்கே சக்தி வாய்ந்தவராக மாறுவார். அதேபோல் 12ம் வீட்டிற்கு அதிபதி சனி ஆவாரா, அத்தகைய சூழ்நிலையில் உங்களின் தைரியம் அதிகரிக்கும். இதனுடன், வெளிநாடுகளுடன் தொடர்புடையவர்களும் பயனடைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் பணத்தை சேமிக்க முடியும்.


துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் இந்த பெயர்ச்சி சாதகமாக இருக்கும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் வக்ர நிலையில் அடைவார். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் தற்செயலான பண பலன்களைப் பெறுவீர்கள். குழந்தை தரப்பிலிருந்து சில நல்ல செய்திகள் வரலாம். குழந்தை பாக்கியத்தை விரும்புபவர்களுக்கும் விரைவில் நல்ல செய்தி கிடைக்கும். காதல் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். துலாம் ராசிக்கு நான்காம் வீட்டிற்கு அதிபதி சனி பகவான் என்பதால் சொத்து, ரியல் எஸ்டேட்டில் வெற்றியைப் பெறுவார்கள்.


மிதுன ராசி
சனி பகவானின் வக்ர நிலை இயக்கம் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான பலன்களைத் தரும். சனிபகவான் இந்த ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார் அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அதிர்ஷ்டம் பெறலாம். இது மட்டுமின்றி இந்த நேரத்தில் வெளிநாட்டு பயணமும் செல்லலாம். நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும். நீங்கள் ஒரு புதிய வேலையைத் தொடங்க நினைத்தால், இதுவே சரியான நேரம். அதுமட்டுமின்றி இந்த நேரத்தில் பொருளாதார நிலையும் நன்றாக இருக்கும். வெளியூர் படிக்கச் செல்லும் மாணவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். தந்தையுடனான உறவுகள் மேம்படும்.


வக்ர நிலை என்றால் என்ன
குரு, செவ்வாய், சனி கிரகங்கள் ஐந்தாமிடத்தில் சூரியன் வரும் போது வக்ரகதி நிலை ஏற்படுகிறது. அதோடு அந்த கிரகத்திற்கு 7ம் இடத்தில் சூரியன் வரும் போது அதி வக்ரமும், 9ம் இடத்திற்கு வரும் போது வக்ர நிலை முடிவடைந்து நேர்கதி அடைகிறது. கிரகங்களின் சுற்றும் வேகம் அடிப்படையில் ஒவ்வொரு வக்ர கதிக்கான காலமும் குறிப்பிடப்படுகிறது.


அதேபோல் வக்ர கதி நிலை அடையும் போது ஒரு கிரகம் தான் கொடுக்க வேண்டிய பலனுக்கு அப்படியே எதிராக கொடுக்க நேரிடும். அதாவது சுப கிரகம் நன்மை செய்வதற்குப் பதிலாக கெடு பலன் கொடுப்பது அல்லது எந்த பலனும் தராமல் போதல் நிகழ்வும், அசுப கிரகம் நல்ல பலன்கள் தரக் கூடிய நிலை கூட இருக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சித்ரா பவுர்ணமி: கிரிவலம் செல்ல உகந்த நேரம் - சிறப்புகள் இதோ..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ