சனிபகவான் 5 மாதங்களுக்கு மேலாக மீண்டும் மகர ராசியில் பயணம் செய்வதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என பார்க்கலாம்.
Shani Vakri 2023: நீதியின் கடவுளான சனி, ஜூன் 17 கும்ப ராசியில் சனி வக்ரம் அடைவார். அதன்படி சனியின் வக்ர பெயர்ச்சி ஜூன் 17ம் தேதி இரவு 10.48 மணிக்கு தொடங்கி நவம்பர் 4 வரை இருக்கும். சனியின் வக்ர பெயர்ச்சி 5 ராசிக்காரர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
மேஷ ராசி: பண இழப்புக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. திருமண வாழ்க்கையில் டென்ஷன் ஏற்படலாம். வாழ்க்கை துணையுடன் விரிசல் ஏற்படும்.
ரிஷப ராசி: உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். தொழிலதிபர்களும் தங்கள் தொழிலில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். உடல்நிலை மோசமாக பாதிக்கப்படலாம்.
கடக ராசி: இந்த நேரத்தில், கடக ராசியில் அஷ்டமத்துச் சனி நடக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், எதிலும் முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது நல்லது. ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
துலாம் ராசி: இந்த காலகட்டத்தில் வேலை செய்பவர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தொழில் செய்பவர்கள் பெரிய அளவில் பண இழப்பீடை சந்திக்க நேரிடும்.
கும்ப ராசி: நீங்கள் உடல் மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தொழிலில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.