சனி பகவானின் மாற்றம்: சில ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் மகிழ்ச்சி, செழிப்பு, மகிமை மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றைத் தரப் போகிறது. இந்த மாதம் சனி பகவான் தனது வக்ர நிலையிலிருந்து மாறி நேர் இயக்கத்துக்கு மாறவுள்ளார். நீதிக்கடவுளின் சஞ்சாரத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளுக்கு சிறப்பு நன்மைகள் ஏற்படும். இவர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் உருவாகும். இந்த காலகட்டத்தில் எதற்கும் தட்டுப்பாடு இருக்காது. வருமானம் அதிகரிப்பதோடு, வியாபாரத்திலும் வளர்ச்சி ஏற்படும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்


மேஷ ராசிக்கு அக்டோபர் மாதம் சனி சஞ்சரிப்பதால் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் வேலையில் வெற்றி பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தின் நிலை நன்றாக இருக்கும்.


கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் இயக்க மாற்றத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த மாதம் அவர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் நிதி நிலை வலுவாக இருக்கும். நீண்ட நாட்களாக சிக்கி இருந்த பணம் இப்போது திரும்ப கிடைக்கும். 


மேலும் படிக்க | நாளை இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வலுவாக இருக்கும்


துலாம்


மகர ராசியில் சனிபகவான் நேர் இயக்கத்துக்கு மாறுவதால், துலா ராசிக்காரர்களும் பலன் அடைவார்கள். இந்த காலகட்டத்தில் நிதி நிலை சிறப்பாக இருக்கும். நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும்.


விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் பாதை மாற்றம் சுபமாக இருக்கும். இக்காலத்தில் வியாபாரத்தில் வளர்ச்சியும், வருமானமும் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் அமையும். குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும்.


மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு சனியின் மாற்றம் மிகவும் சாதகமாக கருதப்படுகிறது. சனிபகவான் இந்த ராசிக்கு நன்மை செய்யும் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். மீன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் அபரிமிதமான நிதி நன்மைகளைப் பெறலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்பும் அமையும். வீடும் குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ராசி மாறுகிறார் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை, செல்வச்செழிப்பு அதிகரிக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ