ஆகஸ்ட் மாத நடவிருக்கும் கிரகப் பெயர்ச்சிகள் 2023: ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்கள் குறிப்பிட்ட நேரத்தில் அதன் ராசியை மாற்றிக் கொண்டே  இருக்கும். அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் ஒவ்வொரு கிரகத்திற்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. அந்தவகையில் ஆகஸ்ட் மாதத்தில் சில பெரிய கிரகங்கள் பெயர்ச்சியாகப் போகிறது, அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும். அதன்படி ஆகஸ்ட் மாதத்தில் சூரியன், புதன், சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் தங்கள் ராசி இடங்களை மாற்றும், இதன் சுப மற்றும் அசுப பலன்கள் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தெரியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிடத்தின் படி, ஒரு கிரகம் பெயர்ச்சியாகும் போதெல்லாம், அதன் சுப மற்றும் அசுப பலன்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையில் காணப்படலாம். அந்தவகையில் ஆகஸ்ட் மாதத்திலும் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல பெரிய மாற்றங்கள் காணப்படும். எனவே ஆகஸ்ட் மாதத்தில் கிரகங்களின் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்கள் மீது எப்படிப் பட்ட பலனைத் தரும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | வக்ர நிலையில் சனி: 3 ராசிகளுக்கு நவம்பர் 3 வரை பணக்கார யோகம்... லாபம், ஏற்றம் கைகூடும்


ஆகஸ்ட் மாத சூரியன் பெயர்ச்சி 2023: ஜோதிட சாஸ்திரத்தின்படி, சூரியனை கிரகங்களின் ராஜாவாக பார்க்கப்படுகிறது, சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு  ராசிக்காரர்களுக்கு மாற 30 நாட்கள் ஆகும். ஒவ்வொரு மாதமும் சூரியன் தன் ராசியை மாற்றுகிறது. அந்தவகையில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி 2023 அன்று சூரியன் சிம்ம ராசியில் நுழைவதால் சில ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும். அத்தகைய சூழ்நிலையில், மேஷம், சிம்மம் போன்ற ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி நல்ல பலனைத் தரும்.


ஆகஸ்ட் மாத சுக்கிரன் பெயர்ச்சி 2023: செல்வம், ஆடம்பரம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றின் காரணியாக சுக்கிரன் கருதப்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்திலும் சுக்கிரன் சுப ஸ்தானத்தில் இருந்தால், அந்த நபர் எல்லாவிதமான பொருள் இன்பங்களையும் பெறுகிறார் என்பது ஜோதிட ஐதீகம். அந்தவகையில் ஜூலை 7 ஆம் தேதி சுக்கிரன் சிம்ம ராசியில் பெயரச்சிடைந்தார், தற்போது ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலை 10.37 மணிக்கு கன்னி ராசியில் பெயர்ச்சி அடையப்போகிறார். இதன் போது கன்னி, துலாம், ரிஷபம் ராசிக்காரர்கள் சுப பலன்களைப் பெறப் போகிறார்கள்.


ஆகஸ்ட் மாத செவ்வாய்ப் பெயர்ச்சி 2023: கிரகங்களின் அதிபதியான செவ்வாயும் ஆகஸ்டில் தனது ராசியை மாறப் போகிறார். அந்தவகையில் தைரியம், வீரம், நிலம்-செல்வம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் செவ்வாய், கடந்த ஜூலை 1 ஆம் தேதி சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 17 ஆம் தேதி செவ்வாய் தனது ராசியை மாற்றுவார். அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 17 ஆம் தேதி அன்று, செவ்வாய் கன்னியில் நுழைவார், இந்த நேரத்தில் மேஷம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள் வாழ்க்கையில் எல்லா வேலைகளிலும் வெற்றி பெறுவார்கள்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சுக்கிரன் வக்ர நிலை... இந்த 3 ராசிகளுக்கு பணத்திற்கும் காதலுக்கும் குறைவே இருக்காது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ