சுக்கிரன் வக்ர நிலை... இந்த 3 ராசிகளுக்கு பணத்திற்கும் காதலுக்கும் குறைவே இருக்காது!

Venus Retrograde 2023: சுக்கிரன் சிம்மத்தில் வக்ர பெயர்ச்சியடைவதால், இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு திடீரென பணமழை, காதல் உள்ளிட்ட பலன்கள் ஏற்படும்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 13, 2023, 07:36 AM IST
  • கடந்த ஜூலை 7ஆம் தேதி சுக்கிரன் சிம்மத்தில் சஞ்சரித்தார்.
  • ஜூலை 22ஆம் தேதி சுக்கிரன் வக்ர நிலையை அடைகிறார்.
  • இதற்கு முன், சுக்கிரன் கடகத்தில் இருந்தது.
சுக்கிரன் வக்ர நிலை... இந்த 3 ராசிகளுக்கு பணத்திற்கும் காதலுக்கும் குறைவே இருக்காது! title=

Venus Retrograde 2023: வேத ஜோதிடத்தின்படி, கோள்கள் அவ்வப்போது தங்கள் இயக்கத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். அதன் பெயர்ச்சி, வக்ர நிலை, எழுச்சி-அமைவு ஆகியவை தொடர்ந்து நடக்கின்றன. கிரகங்கள் எந்த வகையான மாற்றத்தை ஏற்படுத்தினாலும், அதன் பலன் 12 ராசிகளிலும் காணப்படுகிறது. 

செல்வம், ஆடம்பரத்தின் காரணியான சுக்கிரன் குறித்து நாம் பார்த்தோமானால், அது வரும் ஜூலை 22ஆம் தேதி வக்ர நிலைக்கு மாறப் போகிறது. கடந்த ஜூலை 7ஆம் தேதி அதிகாலை 4.28 மணியளவில் சுக்கிரன் கடக ராசியில் இருந்து விலகி சிம்ம ராசியில் பிரவேசித்தார். சுக்கிரன் சிம்மத்தில் வக்ர நிலையை பெறுவதால் இந்த 3 ராசிக்காரர்கள் திடீரென பலன்களைப் பெறத் தொடங்குவார்கள். சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி இந்த ராசிக்காரர்கள் மீது செல்வம், அன்பு, காதல் ஆகியவற்றை பொழியும்.

இந்த ராசிக்காரர்கள் சுப பலன்களை பெறுவார்கள்

துலாம்

சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களின் ஒவ்வொரு வேலைகளிலும் பிரதிபலிக்கும். இதன் போது சுக்கிரனால் பல வழிகளில் நன்மை உண்டாகும். தொழிலில் பெரிய மாற்றங்களைக் காணலாம். தொழில் - வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பதவி மற்றும் சம்பளம் உயரும். நீங்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம். பணவரவுகளால் பொருளாதார நிலை மேம்படும்.

மேலும் படிக்க | டிசம்பர் வரை வக்ர சனியால் இந்த ராசிகளுக்கு கஷ்ட காலம், நிதானம் தேவை

மேஷம்

சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். மக்களின் வருமானம் பெருகும், நிறைய பணம் கையில் நிலைக்கும். வாழ்வில் ஆடம்பரம் அதிகரிக்கும். வாகனம் அல்லது வீடு உள்ளிட்டவற்றை நீங்கள் பெறலாம். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்டவர்களுக்கு இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். இல்லற வாழ்க்கையிலும் அன்பு பெருகும்.

மிதுனம்

சுக்கிரன் வக்ர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான பலன்களைப் பொழிவார். இக்காலத்தில் பண ஆதாயம் உண்டாகும். திடீரென்று எங்கிருந்தோ பணம் கிடைக்கும், இதன் காரணமாக நிதி நிலை மேம்படும். உங்கள் பேச்சில் இனிமை அதிகரித்து, மக்கள் உங்கள் மீது ஈர்க்கப்படுவார்கள். புதிய நபர்களின் தொடர்பின் மூலம் பல வேலைகள் செய்யத் தொடங்கும்.

இந்த 3 ராசிகளுக்கு அசுப பலன்கள் ஏற்படும்

கன்னி

சுக்கிரன் வக்ர பெயர்ச்சியின் மோசமான விளைவுகளை இந்த ராசிக்காரர்கள் சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில், உங்கள் உடல் நலம் அலட்சியம் செய்தால் விளவுகள் கடுமையானதாக இருக்கும். 

மகரம்

சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும். உடல் நலன் குறித்து கவனம் செலுத்துங்கள். இல்லையென்றால், பெரும் பிரச்சனைகளை எதிர் கொள்ள நேரிடலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் சிரமப்படுவார்கள். 

மீனம் 

சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை அளிக்கும். வரும் காலத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த காலகட்டத்தில் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும் உடன் பிறந்தவர்களுடனான உறவில் பதற்றம் கூடும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நகம் வெட்ட எந்த நாள் சிறந்தது? தொழிலில் முன்னேற்றம், பண வரவு ஏற்படும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News