பிறக்கும்போதே அன்னை லட்சுமியின் அருளோடு பிறக்கும் அதிர்ஷ்டக்கார ராசிகள் இவைதான்
Lucky Zodiac Signs: சில ராசிக்காரர்கள் மீது அன்னை லட்சுமியின் அருள் இயற்கையாகவே இருக்கும். அப்படிப்பட்ட அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
செல்வம் நமது வாழ்வில் மிக அவசியமான ஒரு விஷயமாகும். பணம் இருந்தால், வாழ்க்கை வாழ ஒரு தெம்பு கிடைக்கிறது. செல்வத்தின் கடவுளான லக்ஷ்மி தேவியின் அருள் கிடைத்தவர்களுக்கு எப்போதும் பணத்துக்கு குறைவிருக்காது. இதன் காரணமாக லட்சுமி தேவியின் அருளைப் பெற மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். பல வித மந்திரங்களை ஸ்தோத்திரம் செய்வது, பரிகாரங்கள் செய்வது என பலவற்றின் மூலம் அன்னை லட்சுமியின் கருணையை பெற முயல்கிறார்கள். எனினும், சில ராசிக்காரர்கள் மீது அன்னை லட்சுமியின் அருள் இயற்கையாகவே இருக்கும். அப்படிப்பட்ட அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களிடம் லக்ஷ்மி அன்னை எப்போதும் அன்பாக இருப்பார். இவர்கள் ஆடம்பர வாழ்க்கையை அனுபவித்து, ஏராளமான செல்வங்களுக்கு சொந்தக்காரர்களாகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள், புத்திசாலிகள் மற்றும் அதிர்ஷ்டசாலிகள். இவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைகிறார்கள். லக்ஷ்மியின் அருளால் அவர்களுக்கு பணப் பற்றாக்குறையே ஏற்படாது.
மிதுனம்:
மிதுனம் ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகள். இவர்களுக்கு லக்ஷ்மியின் அருளால் செல்வம் பெருகும். வாழ்க்கையில் வெற்றியும் மரியாதையும் கிடைக்கும். இவர்கள் கடின உழைப்பாளிகள். இவர்களின் இயல்பும் மகிழ்ச்சியாக இருப்பதால், மக்கள் இவர்களுடன் இருக்க விரும்புகிறார்கள்.
மேலும் படிக்க | ஜூலையில் 5 கிரகங்களில் மாற்றம்: சிலருக்கு அலுகூலம், சிலருக்கு ஆபத்து
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களும் அதிர்ஷ்டசாலிகளாகப் பிறந்தவர்கள். இவர்களுக்கு எப்போதும் பணத்திற்கு பற்றாக்குறை இருக்காது. இவர்கள் தங்கள் முழு வாழ்க்கையையும் சவுகரியமாக கழிக்கிறார்கள். இவர்களிடம் அதிகமாக பணப்புழக்கம் இருக்கும். இதை தாராளமாக செலவிடுகிறார்கள். அவர்கள் தாங்களும் மகிழ்ச்சியாக இருப்பதோடு, தங்களைச் சார்ந்தவர்களையும் மிகவும் கவனித்துக்கொள்கிறார்கள்.
துலாம்:
துலா ராசிக்காரர்களின் ஆளுமை கவர்ச்சிகரமானது. மக்கள் அவர்களால் எளிதில் ஈர்க்கப்படுவார்கள். இந்த மக்கள் எப்போதும் விலையுயர்ந்த பொருட்களை விரும்புகிறார்கள். ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். அன்னை லட்சுமியின் அருளால் அவர்கள் வாழ்வில் அபரிமிதமான செல்வமும் சகல வசதிகளும் பெறுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமானவர்களாக திகழ்கிறார்கள்.
மீனம்:
மீன ராசிக்காரர்களும் பொதுவாக செல்வந்தர்களாக இருப்பார்கள். இந்த மக்கள் தங்கள் கடின உழைப்பின் அடிப்படையில் வெற்றியைப் பெறுகிறார்கள். அன்னை லட்சுமி அவர்களிடம் அன்பாக இருக்கிறார். அவர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுகிறார்கள், எனவே அவர்கள் காணும் கனவுகள் எப்போதும் நிறைவேறுகின்றன.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இந்த 3 ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி வரப்பிரசாதமாக அமையும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR