Sevvai Peyarchi Palangal: ஜோதிடத்தில் கிரகங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கிரக மாற்றங்கள் பெரிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. ஜொதிட கணக்கீடுகளின் படி, இன்றிலிருந்து 6 நாட்களுக்குப் பிறகு, செவ்வாய் தனது நட்சத்திரத்தை மாற்றி பெயர்ச்சி ஆகவுள்ளார். ஜூலை 8, 2024 அன்று, செவ்வாய் அதிகாலை 02:11 மணிக்கு கிருத்திகை நட்சத்திரத்திற்கு மாறுகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து 12 ராசிகளின் வாழ்விலும் காணப்படும். சில ராசிக்காரர்கள் இதனால் அதிகப்படியான நன்மைகளை பெறுவார்கள். பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறுவார்கள். சிலர் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடலாம். இவர்கள் பல சவால்களை எதிர்கொள்ளலாம். இந்த ராசிகளுக்கு நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சின் போது மிக கவனமாக இருக்க வேண்டிய ராசிகளை(Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 


மிதுனம் (Gemini)


செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி காலத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். வேலையை மாற்ற நினைப்பவர்கள், இந்த காலத்தில் அதை செய்ய வேண்டாம். அவசரப்பட்டு இருக்கும் வேலையை விட்டுவிடாதீர்கள். அப்படி செய்தால் வேலையில்லாமல் இருக்க நேரிடும். தொழிலதிபர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இது நிறுவனத்தின் பிம்பத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். 


ரிஷபம் (Taurus)


செவ்வாய் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நஷ்டங்கள் ஏற்படக்கூடும். இந்த நேரத்தில், தவறுதலாக கூட புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம். இல்லையெனில் எதிர்காலத்தில் பெரிய இழப்பு ஏற்படலாம். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். திருமணமானவர்கள் தங்கள் பேச்சில் மென்மையைக் கடைப்பிடிக்க வேண்டும், இல்லையெனில் சண்டை வருவதற்கான பல வாய்ப்புகள் உள்ளன.  ஆன்மீக நிகழ்ச்சியின் போது குடும்ப உறுப்பினர்களிடையே சண்டை வரலாம்.


சிம்மம் (Leo)


உத்தியோகத்தில் இருக்கும் சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் உடல்நலம் குறித்து அலட்சியமாக இருக்க வேண்டாம், இல்லையெனில் ஒரு பெரிய நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. திருமணமான தம்பதிகளுக்கு சில பிரச்சனைகளால் கவலைகள் உண்டாகலாம். தொழிலதிபர்களுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்படும். தொழிலதிபர்கள் தொழிலில் நஷ்டம் ஏற்படுவதால் மனரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.


மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்.... அள்ளிக்கொடுப்பார் சுக்கிரன்


கடகம் (Cancer)


செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு சவாலான சூழல்களை கொண்டு வரும். புதிதாக வேலையில் சேர்ந்தவர்கள் வேலையில் இருந்து நீக்கப்படலாம். வணிகர்களின் வேலையில் எதிரிகள் தடைகளை உருவாக்கலாம். மாணவர்களுக்கு மூத்தவர்களுடன் சண்டை வரலாம். இந்த நேரத்தில் நிலம் அல்லது சொத்து வாங்கும் திட்டத்தை கைவிடுங்கள். இல்லையெனில், எதிர்காலத்தில் நீங்கள் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியிருக்கும்.


துலாம் (Libra)


வேலையில் இருப்பவர்கள் பணி இடத்தில் சவாலான சூழல்களை எதிர்கொள்ளலாம். இது உங்கள் அலுவலக வேலைகளையும் பாதிக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள், இல்லையெனில் கடுமையான வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சரியான நேரத்தில் செலவுகள் குறைக்கப்படாவிட்டால், நிதி நிலைமை பலவீனமடையாமல் காக்கலாம். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | மாத ராசிபலன்: ஜூலை மாதம் அரசாளப்போகும் அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்.. உங்க ராசி என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ