ரிஷப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி  2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் அதன் ராசியை குறிப்பிட்ட நேரத்தில் மாற்றிக் கொள்ளும். சமீபத்தில், சுக்கிரன் கிரகம் அதன் சொந்த ராசியான ரிஷபத்தில் பெயர்ச்சி அடைந்தார். ரிஷப ராசியில் சுக்கிரன் தங்குவது பல ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தரும். அதேசமயம் ஏப்ரல் 12ம் தேதி சுக்கிரன் வர்க்கோத்தமம் அடைவார். பொதுவாக எந்த நிலையில் இருந்தாலும் வர்க்கோத்தமம் எனப்படும் ராசியிலும், நவாம்சத்திலும் ஒரே வீட்டில் இருக்கும் கிரகம் ஆட்சி நிலையை அடையும் என்பதால் ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் வர்க்கோத்தமம் அடைவது நல்லது. எனவே இந்தக் காலத்தில் 4 ராசிக்காரர்களுக்கு லாபம் கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வர்கோத்தமம் என்றால் என்ன?
வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும். ராசி, மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் லக்கினம் இருந்தால் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் எனப்படும். ஒருவரது ஜாதகத்தில் ஆட்சி/உச்சம் பெற்ற கிரகங்களை விட வர்கோத்தமம் பெற்ற கிரகம் பல ராஜ யோகங்களைத் தர வல்லது. ஒருவருக்கு 2 அல்லது 3 கிரகங்கள் வர்கோத்தமம் பெற்றிருந்தால் அவருக்கு அதிக அளவிலான ராஜயோகம் கிடைக்கும்.


மேலும் படிக்க | சனி பார்வை..இந்த ராசிகளுக்கு சனியின் பார்வையால் பம்பர் ஜாக்பாட்


இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் நல்ல பலன்களைத் தருவார்


ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் நடக்கும். இவர்களுக்கு மரியாதையும் பதவி உயர்வும் கிடைக்கும். அபரிமிதமான பண ஆதாயம் உண்டாகலாம். வியாபாரமும் நன்றாக இருக்கும்.


கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு வலுவான பண ஆதாயத்தைத் தரும். வணிக வர்க்கம் பெரிய ஆர்டர்களைப் பெறலாம். பங்குச்சந்தை, பந்தயம், லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்யலாம்.


கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு அபாயகரமான முதலீடுகளிலிருந்து பலன்களைத் தரும். இது தவிர, பங்குச் சந்தை, பந்தயம், லாட்டரி போன்றவற்றுடன் தொடர்புடையவர்கள் சிறப்புப் பலன்களைப் பெறலாம். மதம் மற்றும் வேலையில் ஆர்வம் இருக்கும். 


சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு கௌரவம் அதிகரிக்கும். அரசியலில் ஈடுபடுபவர்கள் பெரிய பதவியைப் பெறலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறலாம். வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வரலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | குரு பெயர்ச்சி இந்த 3 ராசிகளின் தலைவிதியை மாற்றும், வியாபாரம் பெருகும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ