Shani Drishti Prabhav: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் அதன் நிலையை அவ்வப்போது மாற்றுகிறது. 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் அதன் தாக்கத்தை தெளிவாகக் காணலாம். ஜனவரி 17ம் தேதி சனிபகவான் கும்ப ராசியில் பெயர்ச்சியானார். இந்த நிலையில், சனி பகவான் தனது பத்தாம் பார்வையை விருச்சிக ராசியின் பக்கம் இன்று திருப்புகிறார். அதே நேரத்தில், சுக்கிரனும் தனது ஏழாம் பார்வையை விருச்சிக ராசி பக்கம் வைக்கிறார். மேலும் சனி பகவான் மற்றும் சுக்கிரனின் இந்த நிலை பார்வைகளால் ஷஷ மற்றும் மாளவ்ய யோகங்கள் உருவாகின்றன. இதனால் பல ராசிகளுக்கு சுப பலன்கள் ஏற்படும். சனியின் பத்தாம் பார்வையால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். அத்துடன் இந்த காலத்தில் தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும். இந்த ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.
கும்ப ராசி
கும்ப ராசிக்காரர்களுக்கு சனியின் பத்தாம் பார்வை மிகவும் சாதகமாக இருக்கும். சனி பகவான் கும்ப ராசியில் ஷஷ ராஜயோகத்தையும், சுக்கிரனின் பெயர்ச்சியால் மாளவ்ய ராஜயோகத்தையும் உருவாக்கியுள்ளார். இதனால் கும்ப ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வேலை தேடுபவர்களின் காத்திருப்பு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க | இன்னும் 24 மணி நேரம்..சனியால் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்
சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்களுக்கும் சனியின் பத்தாம் பார்வை சுப பலனை தரும். இந்த காலகட்டத்தில், உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும், மேலும் நீங்கள் நிதி நன்மைகளையும் பெறுவீர்கள். கலைத்துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
ரிஷப ராசி
ரிஷப ராசியின் கர்ம வீட்டில் சனி பெயர்ச்சி அடைகிறது. அவருடைய பார்வை ஏழாவது வீட்டில் உள்ளது. பத்தாம் பார்வையால் சுப பலன்களையும் பெறுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். கூட்டாண்மையிலும் நன்மை உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | குரு பெயர்ச்சி இந்த 3 ராசிகளின் தலைவிதியை மாற்றும், வியாபாரம் பெருகும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ