நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு அம்சத்துக்காக வணங்கப்படுகின்றன. நீதிதேவன் என்று சனீஸ்வரருக்கு பெயர் என்றால், புதன் அறிவுக்கு அதிபதி. நவகிரகங்களில் சுக்கிரன் அழகு புகழ் பிரபலம், ஆடம்பர வாழ்க்கை, பதவி அதிகாரம் என பல முக்கியமான அம்சங்களை நிர்ணயிப்பவர். சுக்கிரன், ஒருவரின் ஜாதகத்தில் சரியான இடத்தில் அமர்ந்திருந்தால் ராஜ வாழ்க்கை நிச்சயம் என்று சொல்வார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிலும் சுக்கிரனின் மகாதசை காலம் ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடியது. சுக்கிர மகாதசை மொத்தம் 20 ஆண்டுகள் நீடிக்கும் என்பதால், வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ சுக்கிரனின் அருள் அவசியம் தேவை.


ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருந்தால், விருப்பம் நிறைவேறுவது என்பது கானல்நீராகிவிடும். சுக்கிர மகாதசை காலத்தைத் தவிர பிற சமயத்தில் மகிழ்ச்சியான, வளமான வாழ்க்கை இருந்தாலும், வாழ்வின் முக்கியமான பகுதியில் பட்ட கஷ்டங்கள் மனதை விட்டு நீங்காது.


சுக்கிர திசையில் திருமணம் ஆகும்போது, அன்பான வாழ்க்கை துணை கிடைக்கும். ஆனால், ஜாதகத்தில் சுக்கிரன் வலுவிழந்து காணப்பட்டால் வாழ்க்கைத்துணையுடன் ஒத்துப்போகாமல் தாம்பத்திய உறவும் கசந்துபோகும். எனவே, சுக்கிரனின் மகாதசை இருந்தால், அவர் உங்கள் ஜாதகத்தில் வலுவாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சில வழிபாடுகளை முறையாக செய்து வந்தால், வாழ்வு இனிக்கும், சமூகத்தில் அந்தஸ்து கூடும். வாழ்க்கைக்கு ஒரு பொருள் இருப்பதாக நிறைவும் ஏற்படும்.


மேலும் படிக்க | 18 ஆண்டுகளுக்குப் பிறகு சனி நட்சத்திரத்தில் நுழையும் ராகு..! 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்


சுக்கிரனை வலுப்படுத்தும் வழிபாடுகளும் பரிகாரங்களும்  


சுக்கிரன் தோஷம் இருந்தாலும், அல்லது சுக்கிரன் பலவீனமாக இருந்தாலும், பணம் இருந்தாலும் அதை பயன்படுத்த முடியாது. நல்லது செய்தாலும் அதற்கான பாராட்டோ நன்றியுணர்ச்சியோ யாரின் மனதிலும் இருக்காது. ‘நான் எல்லோருக்கும் நல்லது தானே செய்தேன், அது அவர்களுக்கு புரியவே இல்லை!’ என்று பலர் ஆதங்கத்துடன் சொல்வதைக் கேட்டிருக்கலாம். அவர்களை இப்படி உணர வைப்பது சுக்கிரன் பலவீனமாக இருப்பதலும் இருக்கலாம்.


சுக்கிர பகவானின் பிரதான தெய்வம் ருரு பைரவர் என்பது பலருக்குத் தெரியாது. 64 பைரவர்களில் ஒருவரான ருரு பைரவரின் மந்திரத்தை ஜெபித்தால், சுக்கிரனின் அருள் கிடைக்கும். தினமும் காலையில் 9, 18 என ஒன்பதின் மடங்குகளில் ருரு பைரவ மந்திரத்தை சொல்லி வழிபட்டு வருவது மிகச் சிறந்த சுக்கிர பரிகாரம் ஆகும். 


ருரு பைரவர் காயத்ரி மந்திரமான, ‘ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே டங்கேஷாய தீமஹி தந்நோ: ருருபைரவ பிரசோதயாத்’ என்பதை தினமும் 108 முறை சொல்லி வழிபட்டால் வளமான வாழ்க்கை, நிம்மதியான குடும்பம், சமூகத்தில் பிரபல்யம் என செழிப்புடன் வாழலாம். 


மேலும் படிக்க | சனியின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு அற்புதமான நேரம்.. செல்வம் பெருகும், மகிழ்ச்சி பொங்கும்


மனதில் மகிழ்ச்சி பெருகவும், நிம்மதியுடன் கூடிய அமைதியான வாழ்வு வாழவும் சுக்கிரனை வலுப்படுத்தும் பரிகாரங்கள் என்பது வழிபாடு தான். வெள்ளிக்கிழமை சுக்கிரன் பகவானுக்கு உரியது. அன்று லட்சுமி தேவியை வழிபடுவதும் விரதம் இருப்பதும் சுக்கிர பகவானை மகிழ்ச்சி பெறச் செய்யும்.


சுக்கிரனுக்கு உரியது இனிப்பு. வெள்ளிக்கிழமை நாட்களில் பாயாசம், சர்க்கரை பொங்கல் செய்து கடவுளுக்கு நிவேதனம் செய்து அதனை பிறருக்கு விநியோகிக்கவும். அதிலும் அரிசி, பால், கலந்து செய்யப்பட்ட பாயசம் விசேஷமானது.


சுக்கிரனுக்கு உரிய நிறம் வெண்மை. எனவே சுக்கிரன் கிரகத்தை வலுப்படுத்த வெள்ளை ஆடைகளை அதிகம் பயன்படுத்துங்கள். திங்கட்கிழமைகளில் வெள்ளை ஆடைகளை அணிவதும், வெண்ணிறத்தில் உள்ள பொருட்களை தானம் செய்வதும் நல்லது.


மேலும் படிக்க | புதனின் அருள் வேண்டுமா? இந்த விஷயங்களை அவசியம் செய்யவும்...


வெள்ளிக்கிழமையும் விரதம் இருக்க வேண்டும். லக்ஷ்மி தேவியை வணங்கி வருவதும், அன்று லட்சுமி அஷ்டோத்திரம் போன்ற மந்திரங்களை சொல்லி அன்னையை வழிபட்டு, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து அதனை பிறருக்கு கொடுத்து மகிழ்ந்தால் சுக்கிரனின் பலம் கூடும்.


எறும்புகளுக்கு மாவு மற்றும் சர்க்கரையை கொடுத்தால்,சுக்கிரனை பலப்படுத்த சிறந்த பரிகாரமாக இருக்கும். அதேபோல வெள்ளிக்கிழமையன்று 'ஷுந் சுக்ராய நம' என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து பெருமாளை வணங்கவும். லட்சுமிபதியான விஷ்ணுவை வணங்கினால், அன்னை லட்சுமிதேவி மனம் மகிழ்ந்து ஆசி அருள்வார்.   


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ருச்சக யோகத்தை உருவாக்கும் செவ்வாய்ப் பெயர்ச்சி! மூட்டை மூட்டையாய் பணம் சேரும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ