சனியின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு அற்புதமான நேரம்.. செல்வம் பெருகும், மகிழ்ச்சி பொங்கும்

Sani Peyarchi Palangal: ஜோதிட கணக்கீடுகளின் படி சனி பகவான் 2023 ஆம் ஆண்டு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பெயர்ச்சி ஆனார்.  அவர் 2025 ஆம் ஆண்டு வரை இந்த ராசியிலேயே இருப்பார். எனினும் வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி, உதயம், அஸ்தமனம் போன்ற மாற்றங்கள் இருக்கும்.   

Sani Peyarchi Palangal: ஜூன் 30 ஆம் தேதி அவர் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார்.  சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நல்ல பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். அந்த ராசிகளை பற்றி இங்கே காணலாம். 

1 /10

ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவானின் அனைத்து வித அசைவுகளுக்கும், இயக்கங்களுக்கும் அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கமும் ராசிகளில் அதிகமாக இருக்கின்றது.  

2 /10

சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் உள்ளார். ஜூன் 30 ஆம் தேதி சனி வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். இது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. 

3 /10

சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான அற்புதங்கள் நிகழும். இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். அந்த ராசிகளை பற்றி இங்கே காணலாம்.   

4 /10

மேஷம்: சனி வக்ர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் வெற்றி கிடைக்கும். கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் மிக நல்ல நேரமாக இருக்கும். இந்த காலத்தில் பொருளாதார அம்சம் வலுவாக இருக்கும். நீங்கள் செய்யும் பணி பாராட்டப்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். மரியாதையும் அந்தஸ்தும் உயரும்.  

5 /10

மிதுனம்: சனி வக்ர பெயர்ச்சியால் நிதி நிலை வலுவாகும். இந்த நேரத்தில் முதலீடு செய்வது நன்மை தரும். நிதி ஆதாயம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இந்த நேரம் மிதுன ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.

6 /10

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியால் நிதி ஆதாயம் இருக்கும். இது நிதி நிலையை மேம்படுத்தும். இந்த நேரம் மிதுன ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். அலுவலகத்தில் பதவி உயரும் வாய்ப்புகள் உள்ளன. பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் சுமுகமான உறவு இருக்கும். உங்கள் மனைவியுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள்.   

7 /10

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசு வேலை தேடுபவர்களுக்கு இப்போது நல்ல நேரம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகளும் இருக்கலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் பணியை அனைவரும் பாராட்டுவார்கள்.

8 /10

தனுசு: சனி வக்ர பெயர்ச்சியால் மாணவர்களுக்கு மிக நல்ல நேரம் ஆரம்பம் ஆகும். இந்த காலகட்டத்தில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நல்ல நேரமாக இருக்கும். அனைத்திலும் வெற்றி பெறுவார்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான பொழுதை கழிப்பீர்கள். இந்த காலத்தில் கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். 

9 /10

சனி பகவானின் அருள் பெற, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை கூறலாம். ஏழை எளியவர்களுக்கு உதவுபவர்களை சனிபகவான் எப்போதும் தொந்தரவு செய்ய மாட்டார். ஆகையால் நம்மால் ஆனவரை நலிந்தோருக்கு உதவுவது நல்லது.  

10 /10

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை