Guru Vakra Peyarchi Palangal: வேத ஜோதிடத்தில், வக்ர பெயர்ச்சி மிகவும் முக்கிய கிரக நிகழ்வாக பார்க்கப் படுகிறது. ஏனெனில் இந்த நிகழ்வானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் தான் இந்த நிகழ்வை ஜோதிடத்தில் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரு பெயர்ச்சி:
இதனிடையே கிரகங்களிலேயே மிகவும் முக்கியமான கிரகமான குரு, இந்த ஆண்டு மே 1, 2024 மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அக்டோபர் மாதத்தில், குரு ரிஷபத்தில் வக்ர நிலையில், அதாவது பின்னோக்கி நகரத் தொடங்குவார். இந்த நிகழ்வு வரும் அக்டோபர் 9, 2024 அன்று, மதியம் 12:33 மணிக்கு (புதன்கிழமை), அரங்கேறும். சுமார் 119 நாட்களுக்கு (பிப்ரவரி 4, 2025 வரை) இதே நிலையில் தான் பயணிப்பார். 


குரு வக்ர பெயர்ச்சி:
குரு வக்ர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் அடுத்த ஆண்டு 2025 ஆம் ஆண்டு வரை அபரிமிதமான பலன்களை பெறுவார்கள். சுப கிராகமான குரு இந்த ராசிகளுக்கு அள்ளிக் கொடுப்பார். இவர்களின் நீண்ட கால பிரச்சனைகள், வேலைகள் அனைத்தும் ஒரு வழியாக படிப்படியாக முடிவுக்கு வரும். அதனுடன் தொழில் ஸ்தானத்தை பொறுத்த வரை பெரிய முன்னேற்றம் கிடைக்கும். சமூக அந்தஸ்து உயரும். இந்நிலையில் எந்த ராசிகளுக்கு இந்த பலன்கள் கிடைக்கும் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்... 


மேலும் படிக்க | குப்த நவராத்திரியும் செவ்வாய்ப் பெயர்ச்சியும் ஏற்படுத்தும் ஜாதகரீதியிலான மாற்றங்கள்!


இந்த ராசிகளுக்கு அமோகமான பொற்காலம்:
மிதுனம்: குரு வக்ர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் என அனைத்தையும் வழங்கும். வாழ்க்கையில் விரும்பிய வெற்றியைப் பெறுவீர்கள். பணி இடத்தில் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். சமூகத்தில் மரியாதை, அந்தஸ்தை பெறலாம். பெற்றோரின் ஆசிகளைப் பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும், இதனால் நிதி நிலை மேம்படும். நிலம், சொத்துக்கள் வாங்கலாம். வியாபாரிகளுக்கு லாபம் பெருகும். தொழிலில் பெரிய உச்சத்தை தொடுவீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 


கன்னி: நிகழப் போகும் குரு வக்ர பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியி தரும். காதல் உறவில் மன கசப்புகள் நீங்கும். திருமணம் நிச்சயிக்கப்படலாம். தொழில், வியாபாரம் செய்யும் கன்னி ராசிக்காரர்களுக்கு மகத்தான வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும். இதனால் நிதி நிலை 2025 ஆண்டிற்கும் முன்னேற்றம் அடையும். தெய்வ காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை பெறலாம். 


விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சியால் வெற்றிகள் குவியும். தொழில் ஸ்தானத்தை பொறுத்த வரை நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். மாணவர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெறுவார்கள். பணவரவு அதிகரிக்கலாம், இதனால் அந்தஸ்து உயரும். தொழிலில் சில முக்கிய முடிவுகளை எடுக்க இதுவே சரியான காலம். சாதனைகளை செய்வீர்கள். எதிரிகளின் தொல்லை நீங்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். ஆரோக்கியம் மேம்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சுக்கிர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு லாபம், பண வரவு, அனைத்திலும் வெற்றி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ