தனுசு ராசிக்கு மாறினார் சுக்கிரன்: யாருக்கு ஆபத்து? யாருக்கு ஆதாயம்? ராசிபலன் இதோ
Venus Transit: மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக அமையும். இந்தப் பெயர்ச்சி இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.
தனுசு ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி: அசுரர்களின் அதிபதியான சுக்கிரன் டிசம்பர் 5 ஆம் தேதி அதாவது இன்று, மாலை 17:56 மணிக்கு தனுசு ராசிக்குள் நுழைந்தார். சுக்கிரன் செல்வம் மற்றும் இன்பத்தின் காரணியாக கருதப்படுகிறார். சுக்கிரன் டிசம்பர் 29 வரை தனுசு ராசியில் இருப்பார். வேத ஜோதிடத்தில் சுக்கிரன் அசுரர்களின் குருவாகவும், வியாழன் தேவர்களின் குருவாகவும் கருதப்படுகிறார்கள். அசுரர்களின் குருவாக இருந்தாலும், சுக்கிரன் ஒரு சுப கிரகமாக கருதப்படுகிறார். தனுசு ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு பல வழிகளில் அற்புதமாக இருக்கும். குரு வேத அறிவு என்றால் சுக்கிரன் உள் அறிவு. இரு கிரகங்களும் சந்திக்கும்போது, ஒரு நபர் வெற்றியை அடைகிறார்.
ஜோதிடத்தில் சுக்கிரனின் முக்கியத்துவம்
வேத ஜோதிடத்தில் காதல், கவிதை, அழகு, கலை மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றைக் குறிக்கும் கிரகமாக சுக்கிரன் கிரகம் கருதப்படுகின்றது. சுக்கிடன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்கு அதிபதி ஆவார். அனைவரது ஜாதகத்திலும் சுக்கிரன் ஒரு சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்துகிறார். ஒருவரது லக்ன பாவத்தில் சுக்கிரன் இருந்தால், அந்த நபர் அழகான தோற்றம் கொண்டவராக இருப்பார். இனிமையான பேச்சு, கனிவு, படைப்பாற்றல், ஈர்ப்புத்தன்மை ஆகியவை அந்த நபரிடம் இருக்கும். ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக உள்ளவர்கள் செல்வம், திருப்தி, புத்திசாலித்தனம் மற்றும் வாழ்க்கையில் செழிப்பு ஆகியவற்றைப் பெறுகிறார்கள்.
சுக்கிரன் தனுசு ராசிக்கு மாறுவதால், இந்த ராசிகளுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்:
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக அமையும். இந்தப் பெயர்ச்சி இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். திருமணம் தடைபட்டு வந்தவர்களுக்கு இப்போது சிறப்பாக திருமணம் நடக்கும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
மேலும் படிக்க | 2023 புத்தாண்டு ராசிபலன்: இந்த ராசிகளுக்கு அமோகமான அதிர்ஷ்டம், வெற்றி மழை பொழியும்
சிம்மம்:
சுக்கிரனின் ராசி மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மைகளைத் தரும். காதல் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இது உங்கள் உறவை மேலும் பலப்படுத்தும். வடிவமைப்பு, கலை, படைப்பாற்றல் மற்றும் கவிதைத் துறையில் இருக்கும் மாணவர்கள் புதிய ஆக்கப்பூர்வமான யோசனைகளைக் கொடுத்து பாராட்டை பெறுவார்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் இந்தப் பெயர்ச்சியின் போது வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவதற்கு பணம் செலவழிக்க நேரிடும். இந்த நேரத்தை அனுபவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
தனுசு:
இந்த மாதத்தில், தனுசு ராசிக்காரர்கள் தங்களை அழகுபடுத்துவதில் அதிக கவனம் செலுத்துவதுடன், தங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக்கொள்வார்கள். உங்கள் ஆளுமையால் மக்கள் கவரப்படுவார்கள். சுக்கிரனின் ராசி மாற்றத்தால் பல புதிய வசதிகளை அனுபவிப்பீர்கள்.
கும்பம்:
சுக்கிரன் சஞ்சாரம் கும்ப ராசியினருக்கு பலன் தரும். சுக்கிரன் சஞ்சாரத்தின் போது உங்களின் சுகபோகங்கள் பெருகும், பொருள் சார்ந்த ஆசைகள் நிறைவேறும். திருமண வாழ்விலும் மகிழ்ச்சி உண்டாகும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.
இந்த ராசிக்காரர்கள் தனுசு ராசியில் சுக்கிரனின் சஞ்சாரத்தில் கவனமாக இருக்க வேண்டும்
கடகம்:
கடக ராசிக்காரர்கள் தாயின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் வீட்டு வேலைகளால் அவரது உடல்நிலை பாதிக்கப்படலாம். காதல் வாழ்க்கையில் ஏமாற்றம் ஏற்படலாம். காதல் ஜோடிகள் பிரிவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.
துலாம்:
இந்த பெயர்ச்சியின் போது, துலாம் ராசிக்காரர்களுக்கு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம். இருப்பினும், எழுத்து, தகவல் தொடர்பு, இலக்கியம் மற்றும் நுண்கலை போன்ற துறைகளில் நீங்கள் சிறப்பாக செயல்படக்கூடும். இந்த காலகட்டத்தில், நீங்கள் இளைய சகோதரர்களுடன் நல்ல தருணங்களை செலவிடுவீர்கள். உறவுகளுடன் பழகும்போது கோவப்படாமல் இருப்பது நல்லது.
மகரம்:
சுக்கிரன் பெயர்ச்சியின் விளைவாக, மகர ராசிக்காரர்களுக்கு சில தவறான புரிதல்கள் ஏற்படலாம். இது உங்கள் உறவுகளை பாதிக்கலாம். மேலும், தேவையற்ற செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆகையால், அனைவருடனும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | 2023 லக்கி ராசிகள்: குருவின் அருளால் ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிகள் இவைதான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ