2023 புத்தாண்டு ராசிபலன்: இந்த ராசிகளுக்கு அமோகமான அதிர்ஷ்டம், வெற்றி மழை பொழியும்

Lucky Zodiacs of New Year: இந்த ஆண்டு 4 ராசிக்காரர்கள் கிரகங்களின் மாற்றங்களால் பல அனுகூலமான விளைவுகளை காண்பார்கள். வாழ்க்கையில் தற்போது இருக்கும் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறுவார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 5, 2022, 11:34 AM IST
  • துலாம் ராசிக்காரர்கள் 2023 ஆம் ஆண்டில் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும் வகையிலான மகிழ்ச்சியை பெறுவார்கள்.
  • இந்த ஆண்டு உங்கள் தொழிலில் முன்னேற வாய்ப்பு கிடைக்கும்.
  • நிதி விஷயங்களில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும், நன்மைகளைத் தரும்.
2023 புத்தாண்டு ராசிபலன்: இந்த ராசிகளுக்கு அமோகமான அதிர்ஷ்டம், வெற்றி மழை பொழியும்

2023 ஆம் ஆண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த புத்தாண்டு அனைவருக்கும் அனைத்து விதமான நல்ல செய்திகளையும், செழிப்பையும் கொண்டு வர வேண்டும் என அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த ஆண்டில் சனி, குரு, ராகு, கேது உள்ளிட்ட கிரகங்களின் மாற்றங்கள் நிகழவுள்ளன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். ஆண்டின் தொடக்கத்திலேயே சனியின் ராசி மாற்றம் ஏற்படவுள்ளது. இதனால், பல ராசிகளில் சனியின் பாதகமான பலன்கள் நீங்கி அவர்களின் வாழ்க்கை படிப்படியாக முன்னேற்றம் காணும். 2023 ஆம் ஆண்டு ஜோதிட பார்வையில் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமான மற்றும் நல்ல பலன்களை அளிக்கும். 

இந்த ஆண்டு மேஷம், மிதுனம், துலாம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் கிரகங்களின் மாற்றங்களால் பல அனுகூலமான விளைவுகளை காண்பார்கள். வாழ்க்கையில் தற்போது இருக்கும் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறுவார்கள். 2023ல் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி தேவியின் அருள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசிக்காரர்களுக்கு 2023ல் மகிழ்ச்சியும், செழிப்பும் கிடைக்கும்

மேஷ ராசிக்காரர்கள் 2023 ஆம் ஆண்டில் ஆன்மீக விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இந்த ஆண்டு ஆன்மீகப் பயணங்களும் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். பழைய உறவுகள் வலுவடையும். மூதாதையர் சொத்துக்களால் மகிழ்ச்சி அடையலாம். திருமணமாகாத ஆண், பெண்களுக்கு இந்த வருடம் திருமணம் நடக்கும். குடும்ப வாழ்க்கையில், வாழ்க்கை துணையுடன் சிறந்த ஒருங்கிணைப்பு இருக்கும். குழந்தை பாக்கியமும் கிடைக்கும். 

மேலும் படிக்க | நாளை முதல் இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் 

நீங்கள் கூட்டாண்மையில் சில வேலைகளைத் தொடங்க திட்டமிட்டிருந்தால், இந்த ஆண்டு அதற்கு சிறப்பாக இருக்கும். உங்கள் வருமானமும் இந்த வருடம் நன்றாக இருக்கும். பொழுது போக்குகள் அதிகரிக்கும். அசையும், அசையா சொத்துக்களை வாங்க வாய்ப்பு உள்ளது. தொழிலதிபர்களுக்கு இந்த ஆண்டு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பும் மரியாதைஉம் கூடும். இந்த ராசிக்காரர்களுக்கு பதவி, கௌரவம், மதிப்பு உயர்வு போன்ற பலன்களும் கிடைக்கும்.

மிதுன ராசிக்காரர்களுக்கு 2023ல் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்

மிதுன ராசியினருக்கு, 2023 ஆம் ஆண்டு புதிய நம்பிக்கையையும், நம்பிக்கையை கொண்டு வரப் போகிறது. இந்த வருடம் மிதுன ராசிக்காரர்களின் வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் நடக்கும். முன்னர் வாட்டி வதைத்த கடனில் இருந்தும் நீங்கள் விடுபடுவீர்கள். இந்த ஆண்டு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. ஏப்ரல் மாதத்திற்குப் பின் வரும் காலம் உங்களுக்கு மிகவும் சாதகமாகவும், மங்களகரமாகவும் இருக்கும். 

உங்கள் கடின உழைப்பு, தகுதி மற்றும் கடந்தகால முதலீடுகளின் பலனை நீங்கள் அறுவடை செய்வீர்கள். திருமணத் தகுதியுள்ள இளைஞர், யுவதிகளின் திருமணத்தில் வரும் தடைகள் நீங்கி, திருமணம் நடைபெறும். உத்யோகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். நீங்கள் வேலை தேடுகிறீர்கள் என்றால் உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். ஆகையால், முயற்சியில் குறை வேண்டாம். கடந்த சில வருடங்களாக வியாபாரத்தில் தடைகளும் பிரச்சனைகளும் இருந்து வந்ததால், அந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு முன்னேற இந்த வருடம் உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு 2023ல் சொத்து, வாகனம் சுகம் கிடைக்கும்

துலாம் ராசிக்காரர்கள் 2023 ஆம் ஆண்டில் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும் வகையிலான மகிழ்ச்சியை பெறுவார்கள். இந்த ஆண்டு உங்கள் தொழிலில் முன்னேற வாய்ப்பு கிடைக்கும். நிதி விஷயங்களில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும், நன்மைகளைத் தரும். எதிர்காலத்திற்காக நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், இந்த ஆண்டு உங்களுக்கு அதற்கான சிறந்த ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டு நீங்கள் அதிக அளவில் பயணம் செய்ய வேண்டியிருக்கும். 

வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த ஆண்டு உங்கள் ஆரோக்கியமும் பொதுவாக நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில், உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். குழந்தைகளைப் பற்றிய கவலைகளும் குறையும். வீட்டில் பொருள் இன்பம் பெருகும். வீடு, வாகன ஆசையும் நிறைவேறும்.

தனுசு ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தால் 2023ல் முன்னேற்றம் பெறுவார்கள்

2023 ஆம் ஆண்டில், தனுசு ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவை முழுமையாகப் பெறுவார்கள். இந்த வருடம் பல வருடங்களுக்குப் பிறகு நிம்மதிப் பெருமூச்சு விடுவது போல் தோன்றும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், செல்வம் பெருகும். இந்த ஆண்டு நிலம், வீடு வாங்க திட்டமிடலாம். சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டாகும். இந்த ஆண்டு தனுசு ராசிக்காரர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆதாரங்களில் பணம் சம்பாதிக்கலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். 

குழந்தைக்காக காத்திருக்கும் தனுசு ராசிக்கார்ரகளுக்கு இந்த ஆண்டு அந்த பாக்கியம் கிடைக்கும். ஜனவரி மாத இறுதியில் இருந்து, நீங்கள் வாழ்க்கையின் பல அம்சங்களில் நேர்மறையையான விளைவுகளை அனுபவிக்கத் தொடங்குவீர்கள். மாணவர்கள் கல்விக்காக வெளியூர் செல்ல முயற்சிக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். நீங்கள் அரசு வேலைக்கு முயற்சி செய்தால், கடினமாக உழைத்தால், வெற்றி உங்கள் கால்களை முத்தமிடும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள். செல்வாக்கும் அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | டிசம்பரில் இந்த ராசிகள் மீது சனியின் நேரடி தாக்கம்: அதிகபட்ச எச்சரிக்கை தேவை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

More Stories

Trending News