2023 லக்கி ராசிகள்: குருவின் அருளால் ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிகள் இவைதான்

New Year Rasipalan: ஜோதிட கணக்கீடுகளின் படி, குருவின் அருளால், புத்தாண்டு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கும். இந்த ராசிகளுக்கு வேலை-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 3, 2022, 06:28 PM IST
  • தேவகுரு பிருஹஸ்பதியின் சிறப்பு அருள் மேஷ ராசியினர் மீது இருக்கும்.
  • இந்த ஆண்டில் குரு பகவானின் மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு பலன் தரும்.
  • நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
2023 லக்கி ராசிகள்: குருவின் அருளால் ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிகள் இவைதான் title=

2023 ஆம் ஆண்டின் அதிர்ஷ்ட ராசிகள்: ஜோதிட சாஸ்திரத்தில் தேவகுரு வியாழன் புத்திசாலித்தனம் மற்றும் கல்வியின் காரணியாகக் கருதப்படுகிறார். வியாழக் கிழமையன்று தேவகுரு மற்றும் பெருமாளை வழிபடுவதன் மூலம் செல்வம், அறிவு, மரியாதை, கௌரவம் போன்றவை கிடைக்கும் என்பது நம்பிக்கை. புத்தாண்டு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. 2023 ஆம் ஆண்டு தங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் அனைவரிடமும் உள்ளது.

இந்த புத்தாண்டில் அனைவரும் லட்சுமி அன்னையின் ஆசீர்வாதம் தங்கள் மீது இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். ஜோதிட கணக்கீடுகளின் படி, குருவின் அருளால், புத்தாண்டு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கும். இந்த ராசிகளுக்கு வேலை-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 2023 ஆம் ஆண்டின் லக்கி ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம்

தேவகுரு பிருஹஸ்பதியின் சிறப்பு அருள் மேஷ ராசியினர் மீது இருக்கும். இந்த ஆண்டில் குரு பகவானின் மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு பலன் தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். இதுமட்டுமின்றி பல பரிமாணங்களில் வெற்றிகளை குவிப்பீர்கள். மாணவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவார்கள். இளைஞர்கள் வெளிநாட்டு பயணம் செய்ய வாய்ப்புகள் வரும். 

மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சியால் உருவாகும் ஷஷ ராஜயோகம்: 4 ராசிகளுக்கு ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி 

மகரம்

ஜோதிட சாஸ்திரத்தின்படி 2023-ம் ஆண்டு மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டில் நீங்கள் பல சாதனைகளை செய்வீர்கள். சில நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். பொருளாதார நிலை மேம்படும். இளைஞர்கள் வெற்றிக்காக சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.

கன்னி

குருவின் சஞ்சாரத்தால், கன்னி ராசிக்காரர்களுக்கு புத்தாண்டில் சில சவால்கள் வரலாம். ஆனால் நீங்கள் அவற்றை மிக எளிதாக தீர்ப்பீர்கள். மாணவர்கள் தேர்வில் சாதகமான முடிவுகளைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட நேரிடும். குறுகிய பயணம் செல்லக்கூடும். 2023 ஆம் ஆண்டில், வியாழனின் அருளால் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

கடகம்

ஜோதிட சாஸ்திரப்படி, கடக ராசிக்காரர்களுக்கு 2023 புத்தாண்டு மங்களகரமானதாகவும், பலனளிக்கக்கூடியதாகவும் இருக்கும். புத்தாண்டில் வியாழனின் பெயர்ச்சி காரணமாக நீங்கள் பல முக்கியமான பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். அதிர்ஷ்டம் மற்றும் முன்னேற்றத்தின் பாதை மேலோங்கி இருக்கும். இதுமட்டுமின்றி வருமானத்திற்கான புதிய வழிகள் பிறக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன்-மனைவி இடையே உறவு மேம்படும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புத்தாண்டு ராசிபலன்: 2023-ல் ராஜயோகத்தை அனுபவிக்கவுள்ள ராசிகள் இவைதான் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News