தீபாவளிக்கு முன்னர் சனி பகவானின் நிலை மாற்றம்: தீபாவளிக்கு முன்னர், தன்தேரஸ் நாளில் சனி பகவானின் நிலை மாறப்போகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு கிரகம் தனது ராசி அல்லது நிலையை மாற்றும்போது, அதன் சுப மற்றும் அசுப பலன்களை அனைத்து ராசிகளிலும் காண முடியும். அனைத்து கிரகங்களிலும், சனி பகவான் சற்று கண்டிப்பான கிரகமாக கருதப்படுகிறார். சனி பகவானின் கருணை பார்வை ஒருவருக்கு இருந்தால், அவர் அந்த நபருக்கு அனைத்து வித உதவிகளையும் செய்து, அனுகூலமான பலன்களை அளிப்பார். அதே சமயம், அவரது கிரோத பார்வை ஒருவர் மிது விழுந்தால், அந்த நபர் பல வித இன்னல்களுக்கு ஆளாவார். சனி பகவான் அனைவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்ப அசுப மற்றும் சுப பலன்களைத் தருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது நிகழவிருக்கும் சனி பகவானின் மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். வக்ர நிலையிலிருந்து சனி தனது இயல்பு நிலைக்கு மாறுவதால், அனைத்து ராசிகளுக்கும் நல்ல பலன்களே கிடைக்கும். எனினும் சில ராசிகள் இந்த மாற்றத்தால் அபரிமிதமான நல்ல பலன்களை அடைவார்கள். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


மேஷம்


ஜோதிட சாஸ்திரத்தின் படி, அக்டோபர் 23 ஆம் தேதி தன்தேராஸ் நாளில், சனி பகவான் வக்ர நிலையிலிருந்து மாறி தனது இயல்பு நிலைக்கு திரும்புவார். ஜனவரி 17, 2023 வரை அவர் இந்த நிலையில் இருப்பார். இந்த காலத்தில் மேஷ ராசிக்காரர்கள் குறிப்பாக நல்ல பலன்களை பெறுவார்கள். அனைத்துத் துறைகளிலும் நன்மைகள் உண்டாகும். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். மேஷ ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். இந்த நேரத்தில், வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சலுகைகள் கிடைக்கும்.


மேலும் படிக்க | காதலுக்காக எதையும் தியாகம் செய்யத் தயாராக உள்ள '4' ராசிப் பெண்கள் 


மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் பரிபூரண ஆசி கிடைக்கும். இந்த காலத்தில் அதிக பணம் சம்பாதிப்பீர்கள். இந்த ராசிக்கு ஒன்பதாம் வீட்டின் அதிபதி சனி ஆவார். இந்த காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். முதலீட்டில் பணம் சம்பாதிப்பதற்கான பல வாய்ப்புகளும் கிடைக்கும்.


கடகம் 


சனி பகவான் கடக ராசியின் ஏழாம் வீட்டிற்கு அதிபதியாக உள்ளார். சனியின் அருளால் இந்த காலத்தில் பண வரவு அதிகரிக்கும். சனியின் தாக்கத்தால் கடக ராசிக்காரர்களின் வாழ்வில் இருந்த தொல்லைகள் அனைத்தும் நீங்கும். கௌரவம் உயரும். இதுமட்டுமின்றி, இந்த நேரத்தில் வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். 


மீனம்


ஜோதிடத்தின் படி, சனி பகவான் மீன ராசியின் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் ஸ்தானங்களில் அதிபதியாக உள்ளார். சட்டம் படிக்கும் மீன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல பலன்களைப் பெறலாம். இதுமட்டுமின்றி, இந்த நேரம் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் ஏற்றதாக கூறப்படுகிறது. கடந்த காலத்தில் செய்த கடின உழைப்பின் பலனை இப்போது பெறலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை  உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய யோகம்: இந்த ராசிகளுக்கு அமோகமான ராஜயோகம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ