சனி பகவானின் நிலை மாற்றம், ராசிகளில் அதன் தாக்கம்: 2022 ஆம் ஆண்டில், சனி பகவான் பல முறை தனது நிலையை மாற்றுகிறார். அக்டோபர் 23ம் தேதி அவர் மீண்டும் தனது நிலையை மாற்றவுள்ளார். வக்ர நிலையில், அதாவது இயல்பு நிலைக்கு எதிர் நிலையில் இருந்த சனி பகவான் 23 ஆம் தேதியன்று தனது நிலையை மாற்றவுள்ளார். சனியின் மாற்றம் தீபாவளிக்கு முந்தைய நாள், அதாவது தன்தேரஸ் அன்று நிகழ்கிறது. அன்றுதான் மாதாந்திர சிவராத்திரியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இந்த நாளில் பல சுப நிகழ்வுகள் ஏற்படவுள்ளன. இதனால் ஏற்படும் சுபயோகம் பல ராசிகளுக்கு பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.
சனியின் மாற்றம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்
பஞ்சாங்கத்தின்படி, சனி பகவான் https://zeenews.india.com/tamil/spiritual/hard-time-for-these-zodiac-peo... அக்டோபர் 2022 ஞாயிற்றுக்கிழமையன்று தனது இயல்பு நிலைக்கும் மாறவுள்ளார். அதனுடைய பலன் நாடு, உலகம் மற்றும் அனைத்து ராசிகளிலும் இருக்கும். மாதாந்திர சிவராத்திரி தினத்தன்று சனியின் நிலை மாறுவது மிகவும் மங்களகரமானது. ஏனெனில் மாதாந்திர சிவராத்திரி நாள் சிவபெருமானுக்கும் உகந்த நாளாகும்.
சனி பகவான் சிறந்த சிவ பக்தர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆகையால், சிவபெருமானுக்கு பிடித்தமான திதியில் சனியின் நிலையில் மாற்றம் ஏற்படுவது சுப பலன்களைத் தரும். ஏழரை நாட்டு சனி மற்றும் சனிதசையின் தாக்கம் உள்ளவர்களுக்கு சனியின் நிலை மாற்றம் நிவாரணம் அளிக்கும். ஏனெனில், எந்த கிரகத்தின் வக்ர நிலையும் சுபமானதாக கருதப்படுவதில்லை. அதுவும் சனி பகவனைன் வக்ர நிலையில் ராசிகள் பல இன்னல்களை எதிகொள்வார்கள். ஆகையால் சனி பகவான் வக்ர நிலையிலிருந்து மாறுவது மிகவும் சுபமாக கருதப்படுகின்றது.
சனி பகவானின் நிலை மாற்றம், அதுவும் சுப தினத்தில் ஏர்படும் நிலை மாற்றம் மிகவும் சாதகமாக அமையப்போகிறது.
மேலும் படிக்க | வாழ்க்கையையே மாற்றும் ரமா ஏகாதசி பருப்பு பரிகாரம்! மகாலட்சுமியை வணங்கும் ஒரே ஏகாதசி
சனி பகவான் அசுப பலன்களை மட்டுமல்ல, சுப பலன்களையும் அளிப்பார்
பொதுவாக சனி என்ற பெயரை கேட்டாலே அனைவருக்கும் அச்சம் பற்றிக்கொள்ளும். அவர் எந்த வித பாரபட்சமும் பார்க்காமல் கர்ம வினைக்கு ஏற்ப பலன்களை அளிக்கிறார். ஜாதகத்தில் சனியின் அசுப நிலை இருந்தாலோ, அல்லது, தீய செயல்களில் ஈடுபட்டாலோ, அவர் பல தொல்லைகளை தருகிறார்.
அதேசமயம் சனியின் நிலை ஜாதகத்தில் சுபமாக இருந்தாலோ, அல்லது ஒருவர் நல்ல செயல்களை செய்து, கடின உழைப்பாளிகளாக இருந்து, மற்றவர்களுக்கு உதவும் வழக்கம் கொண்டிருந்தாலோ, அவர்களுக்கு சனி பகவான் பல நல்ல பலன்களை அளிக்கிறார். மறுபுறம், ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சனி பகவான் ஏழரை நாட்டு சனி, சனிதசை ஆகிய காலங்களில் கடுமையான தண்டனையை வழங்குகிறார்.
சனி பகவானுக்கான பரிகாரங்கள்
- சனியின் தோஷத்தில் இருந்து நிவாரணம் பெறுவதற்கான செயல்களை செய்ய சனிக்கிழமை மிகவும் சிறப்பான நாளாகும். இந்த நாளில் சனி சாலிசாவை பாராயணம் செய்யவும்.
- எண்ணெய், கருப்பு உளுந்து, கருப்பு ஆடைகள், இரும்பு, கருப்பு போர்வை போன்ற சனி பகவானுக்கு உகந்த பொருட்களை தானம் செய்யுங்கள்.
- சனிக்கிழமை மாலை சூரிய அஸ்தமனத்தில், அரச மரத்தில் தீபம் ஏற்றி, சனி மந்திரத்தை குறைந்தது 21 முறை உச்சரிக்கவும். அதன் பிறகு அரச மரத்தை சுற்றி வரவும்.
- சனிக்கிழமையன்று, அருகிலுள்ள சனி கோவிலுக்குச் சென்று, சனிபகவானுக்கு நல்லெண்ணெயை சமர்பிக்கவும். இதைச் செய்வதன் மூலம், சனி பகவான் மிக விரைவில் மகிழ்ச்சியடைந்து, நல்ல பலன்களைத் தரத் தொடங்குவார் என்று நம்பப்படுகிறது.
- ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் உள்ளவர்கள், சனிக்கிழமையன்று கருப்பு உளுந்தை தானம் செய்ய வேண்டும். கருப்பு உளுந்தை கோவிலில் உள்ள சனி பகவானின் சிலைக்கு அருகில் வைத்து விட்டு பிரார்த்தனை செய்யலாம்.
- சனி சாலிசா மந்திரத்தை குறைந்தது 11 முறை உச்சரிக்கவும்.
- பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றும்படி சனி பகவானை மனமுருகி வேண்டிக்கொள்ளவும்.
- உங்கள் பிரார்த்தனை முடிந்த பிறகு, உளுந்தை கோவிலில் உள்ள ஏழைகளுக்கு தானமாக கொடுத்து விடுங்கள்.
- உளுந்து தானம் செய்வது ஏழரை நாட்டு சனியின் தாக்கத்துக்கான ஒரு முக்கிய நிவாரணமாக கருதப்படுகின்றது.
- தொழுநோயாளிகள் மற்றும் ஏழைகளுக்கு உதவி செய்தால் சனி பகவான் மகிழ்ச்சியடைகிறார்.
- தொழுநோயாளிகளுக்கு மருந்து கொடுப்பது, அவர்களின் நலனுக்காக வேலை செய்வது போன்றவை சனிபகவானின் மஹாதசை பலன்களைக் குறைக்கும் என்பது நம்பிக்கை.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | மகாலட்சுமியின் அருள் கிடைக்க வேண்டுமா... ராசிக்கு ஏற்ற எளிய மந்திரங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ