2023 ஆம் ஆண்டின் அதிர்ஷ்ட ராசிகள்: புத்தாண்டு, அதாவது 2023 ஆம் ஆண்டு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. புத்தாண்டு பிறக்கும்போது பொதுவாக அனைவருக்கும் பல வித எதிர்பார்ப்புகள் இருக்கும். இந்த முறையும் 2023 ஆம் ஆண்டு தங்களுக்கு எந்த விதமான நல்ல பலன்களை கொண்டுவரவுள்ளது என்பதை அறிந்துகொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர். புத்தாண்டு நெருங்க நெருங்க, மக்கள் மனதில் வேலை, வியாபாரம், குடும்ப வாழ்க்கை, செல்வம், உறவு, ஆரோக்கியம் ஆகியவை தொடர்பான பல கேள்விகள் எழத் தொடங்குகின்றன. ஜோதிடர்களின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வருடாந்திர ஜாதகத்தின்படி, 2023 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இவர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் சொந்த வீட்டிற்கான கனவு நனவாக்கும். இதனுடன், புதிய வீடு தவிர, புதிய வாகனம் மற்றும் திருமணம் போன்ற வாய்ப்புகளையும் பெறுவார்கள். 2023-ம் ஆண்டின் அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று இந்த பதிவில் காணலாம். 


ரிஷபம்: 


ரிஷப ராசிக்காரர்களின் கனவுகள் அனைத்தும் நிறைவேறும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. சொத்து வகையில் பெரிய லாபம் உண்டாகும். உங்கள் நிதி நிலையில் ஏற்றம் இருக்கும். சனியின் சிறப்பு அருள் இருக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இப்போது திருமண யோகம் உள்ளது. 


கடகம்: 


இந்த ஆண்டு கடக ராசிக்காரர்களின் பல வித விருப்பங்கள் நிறைவேறும். புதிய வாகனம், புதிய வீடு வாங்கும் கனவு நிறைவேறும். இந்த புத்தாண்டு உங்களுக்கு பல விஷயங்களை அள்ளித் தரும் என்றே சொல்லலாம். வாகன சுகம் கிடைக்கும். இது தவிர வாழ்வில் பல வித சுகங்கள் எட்டிப்பார்க்கும். 


மேலும் படிக்க | Astro: அறிவாற்றலை அள்ளித் தரும் 'புதன் கிரகம்' வலுவாக இருக்க செய்ய வேண்டியவை!


கன்னி: 


2023 ஆம் ஆண்டு நிலம் மற்றும் கட்டிடம் தொடர்பான பெரிய லாபம் கிடைக்கும். தடைப்பட்ட ஒப்பந்தம் உங்களுக்கு சாதகமாக அமையும். சொத்தில் முதலீடு செய்யலாம். சொகுசு கார் வாங்கும் யோகம் இந்த ஆண்டு உங்களுக்கு உள்ளது. 


துலாம்: 


2023 துலாம் ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். வாழ்வில் சுகபோகங்கள் அதிகரிக்கும். பெரிய வீடு வாங்கும் யோகம் உண்டாகும். புதிய வசதிகளை பெறுவீர்கள். பனி இடத்திலும் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு பெற வாய்ப்பு உள்ளது. கணவன் / மனைவி குழந்தைகள் மத்தியில் அன்பு அதிகரிக்கும். 


விருச்சிகம்: 


நீண்ட நாட்களாக வாகனம் வாங்க வேண்டும் என்ற கனவில் இருந்தவர்களின் கனவு நிறைவேறும். எதிர்பார்த்ததை விட சிறந்த கார் வாங்குவீர்கள். பண வரவு சாதகமாக இருக்கும். 2023ம் ஆண்டு முதலீட்டுக்கு ஏற்ற ஆண்டாக இருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு அதிக லாபம் தரும் ஆண்டாக இருக்கும்.


தனுசு: 


வீடு, நிலம், வாகனம், திருமணம் போன்ற பெரிய கனவுகள் அனைத்தும் இந்த ஆண்டு நிறைவேறும். சொத்து சேர்ப்பதற்கு இந்த ஆண்டு மிகவும் நல்லது. மூதாதையர் சொத்துக்கள் கிடைக்கும். வாகன சுகம் காணலாம். பணி இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | செவ்வாய் மற்றும் சுக்கிரன் கிரகங்களால் உருவாகும் ராஜயோகத்தால் பலனடையும் 3 ராசிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ