Shani Guru Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களிலும் பல வித மாற்றங்கள் நிகழ்கின்றன. கிரகங்களின் ராசி, நட்சத்திரம், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி, உதயம், அஸ்தமனம் என கிரகங்கள் பல மாற்றங்களுக்கு உட்படுகின்றன. இவற்றால் அனைத்து ராசிகளிலும் பல வித மாற்றங்களும் ஏற்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனி மற்றும் குருவின் மாற்றம்


நீதியின் கடவுளான சனி பகவானும், தேவர்களின் குருவான பிரஹஸ்பதியும் இன்னும் சில நாட்களில் பெரிய மாற்றம் காணவுள்ளனர். சனியும் குருவும் மிக முக்கியமான கிரகங்களாக பார்க்கப்படுகின்றன. இவை இரண்டும் சுப ஸ்தானத்தில் இருந்தால், வாழ்வில் மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது. தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நடந்து முடியும். இன்னும் சில நாட்களில் குரு பகவான், தனது நட்பு கிரகமான சந்திரன், சூரியன் மற்றும் செவ்வாயின் நட்சத்திரங்களில் பிரவேசிக்கவுள்ளார். அவர் கிருத்திகை, மிருகசீஷம் மற்றும் ரோகினி நட்சத்திரத்தில் (Guru Nakshatra Peyarchi) நுழைவார். 


சனி பகவான் (Lord Shani) ராகுவின் நட்சத்திரமான சதய நட்சத்திரத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பிறகு அவர் அவர் குருவின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்வார் (Sani Nakshatra Peyarchi). குரு மற்றும் சனியின் இந்த நட்சத்திர மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினு, சில ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான மகிழ்ச்சியும், செல்வச்செழிப்பும், இன்பமும் கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.


சனி, குரு அருளால் நற்பலன்களை அடையவுள்ள ராசிகள்


மிதுனம் (Gemini)


மிதுன ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் குருவின் நட்சத்திர மாற்றம் அதிகப்படியான நன்மைகளை அள்ளித்தரும். நிதி நிலை முன்பை விட இப்போது நன்றாக இருக்கும். செலவுகளும் அதிகரிக்கலாம். ஆனால் இவை சுபச் செலவுகளாக இருக்கும். இந்த காலகட்டத்தில், புதிய வேலைகளைத் தொடங்குவது சாதகமாக இருக்கும். இவற்றில் நல்ல வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கையும் இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுப்பெறும். 


மேலும் படிக்க | இன்னும் 3 நாட்களில் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை ஆரம்பம்: அள்ளித்தருவார் சுக்கிரன்


சிம்மம் (Leo)


சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் குருவின் நட்சத்திர மாற்றங்கள் பல வித நன்மைகளை கொண்டு வரும். உங்கள் தடைபட்ட வேலைகள் அனைத்தும் மீண்டும் தொடங்கும். தொழிலில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களுக்கு பல புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். அதை நீங்கள் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும்.


தனுசு (Sagittarius)


தனுசு ராசிக்காரர்களுக்கு, சனி மற்றும் குருவின் மாற்றத்தால் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.  சொந்த தொழில் செய்பவர்களுக்கு வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடன் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக முடிவுக்கு வரும். குரு மற்றும் சனியின் சுப தாக்கத்தால் உங்கள் நிதி நிலையும் மேம்படும், பண வரவு அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது.


பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.


மேலும் படிக்க | சனியின் ராசியில் சூரியன்: இந்த ராசிகளுக்கு நம்ப முடியாத நற்பலன்கள்... கோடீஸ்வர யோகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ