இன்னும் 3 நாட்களில் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை ஆரம்பம்: அள்ளித்தருவார் சுக்கிரன்

Venus Transit: இந்த பெயர்ச்சியின் தாக்கத்தால், மொத்தமுள்ள 12 ராசிகளில் பல ராசிகளுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கவுள்ளன. அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 9, 2024, 11:30 AM IST
  • கன்னி ராசிக்காரர்களுக்கு குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.
  • வாழ்க்கையில் உற்சாகம் அதிகரிக்கும்.
  • சுக்கிரனின் அருளால் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
இன்னும் 3 நாட்களில் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை ஆரம்பம்: அள்ளித்தருவார் சுக்கிரன்

Venus Transit: ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. கிரகங்களின் மாற்றங்களால் பல யோகங்கள் உருவாகின்றன. இவை மனிதர்களுக்கு சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கின்றன. கிரகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இந்த கிரக மாற்றங்கள், அதாவது கிரக பெயர்ச்சிகள் பெரிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன.

Add Zee News as a Preferred Source

சுக்கிரன் பெயர்ச்சி

செழிப்பு, செல்வம், பேச்சாற்றல், அறிவாற்றல், பெருமை, செல்வம், ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் உச்சம் பெற்றிருந்தால், அவருக்கு வாழ்வில் இந்த அம்சங்களால் பெருமையும் மதிப்பும் கிடைக்கும். சுக்கிரன் இன்னும் 3 நாட்களில், அதாவது பிப்ரவரி 12 ஆம் தேதி மகர ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இந்த சுக்கிரன் பெயர்ச்சி மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது. ஏனெனில், இந்த பெயர்ச்சியின் தாக்கத்தால், மொத்தமுள்ள 12 ராசிகளில் பல ராசிகளுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கவுள்ளன. அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம் (Aries)

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் குடும்ப வாழ்க்கையில் குதூகலம் ஏற்படும். நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். குழந்தைகளால் மனம் மகிழ்ச்சி அடையும். 

ரிஷபம் (Taurus)

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி பணியிடத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களைக் கொண்டு வரும். வாழ்க்கைத் துணையுடனான உறவு பலமடையும். உறவினர்களின் வருகையால் வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான அதரவை பெறுவீர்கள். 

மிதுனம் (Gemini)

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் நண்பர்கள் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும். உங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்க அவர்கள் உதவுவார்கள். நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்து வந்த பல பிரச்சனைகள் இப்போது தீர்ந்துவிடும். உடல் நலன் நன்றாக இருக்கும். 

மேலும் படிக்க | சனியின் ராசியில் சூரியன்: இந்த ராசிகளுக்கு நம்ப முடியாத நற்பலன்கள்... கோடீஸ்வர யோகம்

கன்னி (Virgo)

கன்னி ராசிக்காரர்களுக்கு குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். வாழ்க்கையில் உற்சாகம் அதிகரிக்கும்.  சுக்கிரனின் அருளால் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த காலத்தில் நிதி நிலை நன்றாக இருக்கும். வணிகத்தில் ஈடுபட்டுள்ள கன்னி ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் நல்ல நிதி லாபம் பெற முடியும். ஆடம்பர பொருட்கள், மாடலிங், ஊடகம், கலை மற்றும் இசை ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள் இந்த காலத்தில் அதிகப்படியான வெற்றி காணலாம். 

தனுசு (Sagittarius)

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலம் பிரகாசமானதாக இருக்கும். இத்தனை நாட்களாக உங்களை வாட்டி வதைத்து வந்த பல பிரச்சனைகளுக்கு இப்போது தீர்வு காணலாம். உடல் உபாதைகளிலிருந்து இப்போது விடுபடுவீர்கள். வணிகத்தில் ஈடுபட்டுள்ள தனுசு ராசிக்காரர்கள் இப்போது அதிகப்படியான லாபம் காண்பார்கள். 

கும்பம் (Aquarius)

கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கத்தால் பல அனுகூலமான நன்மைகள் கிடைக்கும். திருமணம் ஆகாத கும்ப ராசிக்காரர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயம் ஆகும். திருமண வாழ்வில் உள்ளவர்களுக்கு வாழ்க்கைத் துணையுடனான அன்பும் உறவும் வலுப்பெறும். குழந்தைகளால் வீட்டில் மகிழ்ச்சி இருக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. )

மேலும் படிக்க | மார்ச் மாதத்தில் படப்போகும் கஷ்டங்களுக்கு இப்போதே தயாராகிவிடுங்கள்! வருமுன் காப்பது நல்லது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News