செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும்.. அடுத்தடுத்து வெற்றிகள் குவியும்
Mangal Gochar: சிம்மத்தில் செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து 12 ராசிகளின் வாழ்விலும் காணப்படும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு செவ்வாய் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும்.
செவ்வாய் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தில் செவ்வாய் கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படுகிறார். வீரம், சாகசம், துணிச்சல், திருமணம், நிலம் ஆகியவற்றின் காரணியாக செவ்வாய் கருதப்படுகிறார். ஜூலை 1, 2023 அன்று செவ்வாய் தனது ராசியை மாற்றி சிம்ம ராசிக்குள் நுழையப் போகிறார். இதன் பிறகு செவ்வாய் 2023 ஆகஸ்ட் 21 வரை சிம்மத்தில் இருப்பார்.
சிம்மத்தில் செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து 12 ராசிகளின் வாழ்விலும் காணப்படும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு செவ்வாய் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். இவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக இந்த காலத்தில் பல வித வெற்றிகளை பெறுவார்கள். இத்துடன் இவர்களுக்கு பண ஆதாயமும் உண்டாகும். இந்த காலத்தில் இவர்கள் அபரிமிதமான நற்பலன்களை பெற்று பெரும் மகிழ்ச்சி பெறுவார்கள். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
செவ்வாய் பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்
மேஷ ராசி:
மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி பல நன்மைகளைத் தரும். உங்களின் தைரியமும், திறமையும் தொடர்ந்து அதிகரித்து, ஒன்றன் பின் ஒன்றாக உங்களுக்கு வெற்றியைத் தரும். அனைத்து முக்கியமான தேர்வு-போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். சொத்து, இறக்குமதி-ஏற்றுமதி வேலைகளில் சுறுசுறுப்பாக இருப்பவர்கள் சிறப்பான பலன்களைப் பெறலாம்.
மிதுன ராசி:
செவ்வாய் கிரகம் தைரியம் மற்றும் வீரத்தை அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து தொடர்பான பணிகளில் லாபம் இருக்கும். உங்கள் எதிரிகள் தானாகவே சரணடைவார்கள். உங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்களுக்கு முழுமையடையாத பணிகள் இருந்தால், அவை அனைத்தும் இந்த நேரத்தில் முடிவடையும். தாய், தந்தை மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் முழுமையான ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் பணி நேர்த்தியால் நீங்கள் பாராட்டப்படுவீர்கள்.
மேலும் படிக்க | ஜூலையில் 5 அபூர்வ யோகங்கள்! இனி ‘இந்த’ ராசிகளின் காட்டில் ‘அதிர்ஷ்ட மழை’ கொட்டும்!
கடக ராசி:
வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கடக ராசிக்காரர்களுக்கு இது மிக நல்ல நேரமாக இருக்கும். இவர்களது வியாபாரம் பெருகும். செவ்வாய் பெயர்ச்சியால் தொழிலில் லாபம் உண்டாகும். வியாபாரம் பல இடங்களுக்கு பரவும். இப்போது முதலீடு செய்ய ஏற்ற நேரம். இந்த கலாத்தில் செய்யப்படும் முதலீட்டால், எதிர்காலத்தில் நல்ல லாபம் உண்டாகும். தந்தையின் ஒத்துழைப்பால் சில முக்கிய வேலைகள் முடியும். அலுவலக பணிகளில் உள்ள கடக ராசிக்காரர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
சிம்ம ராசி:
செவ்வாய் கிரகம் பெயர்ச்சியாகி சிம்ம ராசியில்தான் வருகிறது. இதன் காரணமாக இவர்களின் ஆளுமையில் வித்தியாசமான பிரகாசம் காணப்படும். அதிக அளவில் ஆற்றல் இருக்கும். உங்கள் இலக்குகளை நிறைவேற்ற இது சரியான நேரம். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். பணப் பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது நல்லது.
மீன ராசி:
மீன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி விரும்பிய பதவி உயர்வை அளிக்கும். உங்கள் எதிரிகள் அழிக்கப்படுவார்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம். பயணங்களால் நன்மை உண்டாகும். பண வரவு சாதகமாக இருக்கும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நேர்த்தியான தலைமை பண்புகளை பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வக்ர நிலையில் சனி, ராகு, கேது: 3 ராசிகளுக்கு பொற்காலம்.. திகட்ட திகட்ட மகிழ்ச்சி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ