12 ஆண்டுக்குப் பிறகு உருவாகும் கஜலட்சுமி யோகம், 3 ராசிக்காரங்க கையில் பணம் அதிகம் சேரும்
Guru-Shukra Yuti 2024: ஜோதிடத்தின்படி, ஒரு ராசியில் இரண்டு கிரகங்களின் சேர்க்கை மிகவும் முக்கியம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது. அந்த வகையில் குரு சுக்கிரன் சேர்க்கையால் உருவாகப்போகும் கஜலட்சுமி ராஜயோகம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலனை தரும் என்று பார்ப்போம்.
குரு சுக்கிரன் சேர்க்கையால் கஜலட்சுமி ராஜயோகம்: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் கிரகங்களின் சேர்க்கை நிகழ்வதுண்டு. அப்படிப்பட்ட கிரக சேர்க்கைகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் வருகிற மே 1 ஆம் தேதி, தேவரிகளின் குருவாக கருதப்படும் குருபகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். அதே நேரத்தில், ஆடம்பரம், ஆசை, செலவு, சுகபோகம் ஆகியவற்றுக்குக் காரணி சுக்கிர பகவான் மே 19 அன்று ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இத்தகைய சூழ்நிலையில் குரு மற்றும் சுக்கிரன் ஒரே ராசியில் அமர்து சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கஜலட்சுமி ராஜயோகத்தை உருவாகப் போகிறார்கள்.
இந்நிலையில் ஜோதிடத்தின் படி, குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம் சில ராசிக்காரர்களுக்கு அதிஷ்டமாக இருக்கும். அதுவும் சுக்கிரனின் சொந்த வீட்டில் இந்த சேர்க்கை நிகழ்வதால், இந்த யோகம் உருவாகிறது. இதனால் குறிப்பிட்ட ராசிக்காரர்களின் மரியாதையும், கௌரவமும் அதிகரிப்பதோடு, தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல நிதி நன்மைகளைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2024: பதவி உயர்வு, பணபலம் சேரக்கூடிய அதிர்ஷ்டசாலி ராசிகள் இவைதான்
மேஷம் (Aries Zodiac Sign) : மேஷ ராசிக்காரர்களுக்கு கஜலட்சுமி ராஜயோகத்தால் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இந்த ராசிக்காரர்கள் குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். இந்த நேரத்தில், முக்கிய முடிவுகளை எடுத்து அதில் வெற்றி பெறுவீர்கள். அதுமட்டுமின்றி செல்வமும் வளமும் பெருகும். ஆசைகள் அனைத்து படிபடியாக நிறைவேறும். நபர்களின் முழுமையான ஆதாரவைப் பெறுவீர்கள். ஆன்மீகத்தில் உங்களின் நாட்டம் அதிகரிக்கும். திருமணமான வாழ்க்கை அன்புடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கும்.
கடகம் (Cancer Zodiac Sign) : கடக ராசிக்காரர்கள் கஜலட்சுமி ராஜயோகத்தால் எதிர்பாராத பண ஆதாயங்களைப் பெறக்கூடும். மேலும் எதிர்பாராத அளவில் பண வரவைப் பெறப் போகிறீர்கள். அதுமட்டுமின்றி வருமானத்தில் மிகப்பெரிய அளவில் உயர்வை காணலாம். வங்கி இருப்பு அதிகரித்து இன்பமாக இருப்பீர்கள். முதலீடு செய்வதன் மூலம் லாபம் கிடைக்கும், இதனால் உங்களின் பொருளாதார நிலை மேம்படும். தொழிலில் நம்பிக்கை அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பை பெறலாம்.
சிம்மம் (Leo Zodiac Sign) : சிம்ம ராசிக்காரர்களுக்கு கஜலட்சுமி ராஜயோகத்தால் வருமானத்தில் உயர்வு ஏற்படும். இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தத்தை பெறலாம். சமயப் பணியால் மரியாதை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு அபரிமிதமான லாபம் கிடைக்கும். நிதி நிலையில் எதிர்பாராத அளவில் முன்னேற்றம் ஏற்படும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும். அதுமட்டுமின்றி புதிய வாகனம் மற்றும் சொத்துக்கள் வாங்குவதன் மூலம் சந்தோஷம் அடைவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Astro Traits: அறிவாற்றலை அள்ளிக் கொடுக்கும் புதனின் ஆசி பெற்ற ‘4’ ராசிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ