Healthy Life & Blood platelets : உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். அதற்கு உதவுவது நாம் உண்ணும் சத்தான உணவுகள் மற்றும் பழங்கள் தான். அதிலும் ரத்த விருத்தி மற்றும் பிளேட்லெட்டுகளை எவ்வாறு அதிகரிப்பது என்பதற்கு பதில் பழம் என்பதாகவே இருக்கிறது. உடலில் பிளேட்லெட்டுகள் எண்ணிக்கைக் குறைந்தால் பல நோய்கள் ஏற்படுகின்றன. நாம் உண்ணும் உணவு மற்றும் பழங்களிலேயே பிளேட்லெட்டுகளை இயற்கையாக அதிகரிக்கக்கூடிய பல விஷயங்கள் உள்ளன, அவற்றைத் தெரிந்துக் கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிளேட்லெட்கள் & நோய்கள்


பொதுவாக டெங்கு நோய் ஏற்பட்டால் பிளேட்லெட்டுகள் குறையும். இதற்கு காரணம், டெங்கு வைரஸ் முதலில் உடலில் உள்ள பிளேட்லெட்டுகள் மற்றும் எலும்புகளைத் தாக்குகிறது. டெங்குவைத் தவிர, பிளேட்லெட்டுகள் எண்ணிக்கையை குறைக்கும் சில நோய்கள் உள்ளன. தன்னுடல் எதிர்ப்புக் கோளாறுகள், எலும்பு மஜ்ஜை நோய்கள், தொற்றுகள், இரத்தம் உறைதல் பிரச்சினைகள், லுகேமியா, கல்லீரல் ஈரல் அழற்சி, ஹெபடைடிஸ் சி, எச்.ஐ.வி போன்ற நோய்கள் ஏற்பட்டால் பிளேட்லெட்டுகள் குறைந்துவிடுகின்றன


மது அருந்தும் பழக்கம் இருந்தாலும், உடலில் பிளேட்லெட் உற்பத்தி குறையலாம். பொதுவாக பப்பாளி மற்றும் பப்பாளி இலைகள் பிளேட்லெட்டுகளை அதிகரிப்பதில் மிகவும் பயனுள்ளதாக கூறப்படுகிறது. உடலில் பிளேட்லெட்டுகளை அதிகரிப்பதில் பப்பாளியைத் தவிர வேறு பழங்களும் பலன் அளிக்கின்றன. உணவே மருந்து என்று சொல்வது உண்மை தான்.


பிளேட்லெட்டுகளை அதிகரிக்க உதவும் பழங்கள்
மாதுளை
ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ள மாதுளம்பழம், பிளேட்லெட் எண்ணிக்கை மற்றும் ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.


மேலும் படிக்க | கருவளையங்களை மாயமாய் மறைய செய்யும் சில எளிய வீட்டு வைத்தியங்கள்!


பச்சை இலை காய்கறிகள்
கீரை, முட்டைக்கோஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளில் வைட்டமின் கே நிறைந்துள்ளது, இது இரத்த உறைதலுக்கு அவசியமானது. சாலடுகள், ஸ்மூத்திகள் மற்றும் சமைத்த உணவுகளில் பச்சை இலை காய்கறிகளை பயன்படுத்துவது பிளேட்லெட் எண்ணிக்கையை மேம்படுத்தும்.


பூசணிக்காய்
பூசணிக்காயில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது, இது பிளேட்லெட் உற்பத்திக்கு உதவுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.  


பீட்ரூட்
பீட்ரூட்டில் இரும்பு மற்றும் ஃபோலேட் நிறைந்துள்ளது, இது இரத்த சிவப்பணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகளின் உற்பத்திக்கு உதவுகிறது. காயாக சமைத்தோ அல்லது சாலட், ஜூஸ் என எப்படி வேண்டுமானாலும் பீட்ரூட்டை பயன்படுத்தலாம்.


கேரட்
கேரட்டில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது, இது நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் பிளேட்லெட் உற்பத்திக்கு உதவுகிறது. பச்சையாகவோ, வேகவைத்ததாகவோ அல்லது ஜூஸாகவோ எடுத்துக் கொள்ளலாம்.  


மேலும் படிக்க | தக்காளி சூப்பர்புட் தான்... ஆனால் இந்த பிரச்சனை இருக்கிறவங்க தவிர்ப்பது நல்லது


சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது பிளேட்லெட் உற்பத்தியை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவுகிறது.


நல்லெண்ணெய்
எள் எண்ணெயில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். சமையலில் நல்லெண்ணெயைப் பயன்படுத்துவது ப்ளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கும்.


நெல்லிக்காய்
 வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகம் உள்ள நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியையும், பிளேட்லெட் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது.


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஆரோக்கியத்தைக் கொடுக்கும் பழங்களே உடல்நலனைக் கெடுக்கும்! நீரிழிவு நோயாளிகளுக்கு எதிரியாகும் பழங்கள்!


 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ