பெஸ்ட் காலை உணவு... சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிட்டால் கிடைக்கும் இந்த 5 நன்மைகள்!

Healthy Breakfast Tips: சர்க்கரை வள்ளிக்கிழங்கு காலை உணவுக்கு சிறந்த தேர்வாகும். அந்த வகையில், காலையில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை அடிக்கடி எடுத்துக்கொண்டால் உங்களுக்கு கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் (Sweet Potato) பலவித ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருக்கின்றன. ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவை சாப்பிட்டால் நாள் முழுவதுமே உடலில் ஆற்றல் நிறைந்திருக்கும், பணியில் சுணக்கமோ மந்தநிலையோ ஏற்பாடது. அந்த வகையில், சர்க்கரை வள்ளிக்கிழங்கை தொடர்ந்து காலை உணவாக சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த புகைப்படத்தொகுப்பில் விரிவாக பாருங்கள்.

1 /8

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வைட்டமிண் ஏ, சி, இ ஆகியவை உள்ளன. இவை சரும ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுதல் மற்றும் கண் பார்வைக்கு உதவக்கூடியவை அதேபோல் இதில் ஃபைபரும் இருப்பதால் செரிமானத்திற்கும் நல்லது. அதேபோல், இதில் குறைந்த கலோரிகள் உள்ளன,  ஆண்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உள்ளன.  

2 /8

இத்தகைய ஊட்டச்சத்துகள் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைந்திருப்பதால் அதனை நீங்கள் காலை உணவாகவே எடுத்துக்கொள்ளலாம். அந்த வகையில், இதனை காலையில் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம்.   

3 /8

கரோட்டினாய்டுகள் மற்றும் அந்தோசயினின்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்குகளில் நிறைந்துள்ளன. இவை இரண்டும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது.   

4 /8

மேலும் இது கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கும் தன்மையை உடையதாகும். இதனால் இதய நோய் வருவதற்கான ஆபத்துகள் குறைவாகும்.   

5 /8

இதில் பீட்டா கரோட்டின், வைட்டமிண் ஏ இருப்பதால் மாகுலர் சிதைவு எனப்படும் பார்வை குறைப்பாடு ஏற்படும் ஆபத்தை குறைக்கும்.   

6 /8

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அலர்ஜி எதிர்ப்பு தன்மை இருப்பதால் கொழுப்பான செல்கள் வளர்வதை இது தடுக்கும். இதனால் உடல் எடை குறைப்பு எளிமையாக இருக்கும்.   

7 /8

சர்க்கரை வள்ளிக்கிழங்கை அவித்து சாப்பிடுவதன் மூலம் குறைந்த Glycemic Index அதில் இருக்கும. இதனால் ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்.   

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்த தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.