Mars Jupiter Conjuction 2023: வேத சாஸ்திரங்களின்படி, அனைத்து நவக்கிரகங்களும் சீரான இடைவெளியில் ராசிகளை மாற்றிக்கொண்டே இருக்கும். அவரது பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கிறது. தற்போது 50 வருட அபூர்வ யோகா உருவாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நேரத்தில் சிம்மத்தில் செவ்வாய் மற்றும் குரு ஒன்றாக அமர்ந்துள்ளனர். அவர்கள் ஒன்றிணைந்து, ஒரு அபூர்வ நவபஞ்சம் ராஜயோகத்தை உருவாக்கியுள்ளனர். இந்த அபூர்வ ராஜயோகம் அமைவதால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் மகிழ்ச்சி உண்டாகும். ஆனால், குறிப்பாக இந்த நான்கு ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று இங்கு பார்ப்போம்.


தனுசு


நவபஞ்சம் ராஜ்யோகத்தால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலியாக இருக்கப் போகிறீர்கள். வெளியூர் சென்று படிக்கும் மாணவர்களின் கனவு நனவாகும். ஒரு இடத்தில் நீண்ட நாள்களாக சிக்கிக்கொண்டிருந்த பணம் திரும்ப வரலாம். உங்கள் தொழிலை மேம்படுத்த குடும்பத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.


மேலும் படிக்க | சூரியனின் அருளால் ‘இந்த’ ராசிகளுக்கு ஆடி மாதம் அட்டகாசமாய் இருக்கும்!


கடகம்


இந்த அரிய ராஜ்யோகத்தால் விளைவால், பணியில் இருப்பவர்கள் முன்னேற்றத்தை காணலாம். இதனுடன், அவர்கள் விருப்பமான பதவி உயர்வையும் பெறலாம். இந்த நேரத்தில், செல்வம் சேரும் இடத்தில் செவ்வாய் அமர்ந்திருப்பதால், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். புத்திசாலித்தனத்தால் கடன் வலையில் இருந்து விடுபடுவீர்கள்.


சிம்மம்


குரு - செவ்வாயின் தாக்கத்தால் உங்கள் ஜாதகத்தில் திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. அதன் பலன் காரணமாக, அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். தடைபட்ட உங்களின் வேலை முடிய ஆரம்பிக்கும். சமூகத்தில் உங்களின் புகழ் உயரும். மனைவியுடன் சுற்றுலா செல்லலாம். பிள்ளைகளின் கல்வியில் இருந்து அனைத்திலும் நிதானமாக இருப்பீர்கள்.


மேஷம்


உங்கள் ராசிக்கு அதிபதி செவ்வாய். தற்போது அவர் சிம்ம ராசியில் அமர்ந்துள்ளார். அதன் விளைவு காரணமாக, நீங்கள் பெரும் லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது. நவ்பஞ்சம் ராஜ்யோகத்தின் மூலம், பணியிடத்தில் புதிய பொறுப்புகளுடன் பதவி உயர்வு பெறலாம். நீங்கள் ஒரு புதிய வேலையைத் தொடங்க முடிவு செய்யலாம், அதில் நீங்கள் முன்னேற்றத்தைப் பெறுவீர்கள்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சந்திரன் குரு சேர்க்கை: கஜகேசரி யோகத்தால் இந்த 3 நிதி நிலை உயரப் போகுது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ