துலாம் ராசியில் சதுர்கிரஹி யோகம்: அனைத்து 12 ராசிகளும் குறிப்பிட்ட காலத்தில் தங்கள் நிலைகளை  மாற்றிக்கொண்டே இருக்கின்றன. கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இவற்றின் தாக்கம் சில ராசிகளில் சுப விளைவுகளையும் சில ராசிகளில் அசுப விளைவுகளையும் ஏற்படுட்தும். கிரகப் பெயர்ச்சிகள் மற்றும் கிரக சேர்க்கைகளின் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை ராசிகளில் காண முடியும். சில கிரகங்கள் ஒரே ராசியில் இணையும் போது, ​​ஏதாவது ஒரு யோகம் நிச்சயம் உருவாகும். அப்படி உருவாகும் யோகம் ராசிகளுக்கு சுபமாகவும் இருக்கலாம், அசுபமாகவும் இருக்கலாம். அக்டோபர் 27 ஆம் தேதி, துலாம் ராசியில் சதுர்கிரஹி யோகம் உருவாக உள்ளது, இது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிட சாஸ்திரப்படி சூரியன், புதன், சுக்கிரன், கேது ஆகிய கிரகங்கள் ஒன்றாக இருப்பதால் இந்த யோகம் உருவாகிறது. அக்டோபர் 27ம் தேதி இந்த நான்கு கிரகங்களும் துலாம் ராசியில் இருக்கும். மேலும் அதன் தாக்கம் அனைத்து மக்களின் வாழ்விலும் தெரியும். ஆனால் குறிப்பிட்ட 3 ராசிகளின் அதிர்ஷ்டம் இந்த யோகத்தால் உச்சத்தில் இருக்கும். 


மேலும் படிக்க | கிரகங்களின் ராசி மாற்றம்: இந்த ராசிகளுக்கு அடுத்த 140 நாட்கள் பொற்காலமாக இருக்கும்


கன்னி:


ஜோதிடத்தின் படி, கன்னி ராசிக்காரர்களுக்கு இரண்டாம் வீட்டில் சதுர்கிரஹி யோகம் உருவாகிறது. அப்படிப்பட்ட நிலையில் கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் சிறப்பான பண பலன்களை தரும். நீண்ட நாட்களாக சிக்கி இருந்த பணம் விரைவில் திரும்பக் கிடைக்கும். தொழில், வியாபாரம் ஆகியவற்றில் சம்பந்தப்பட்டவர்களுக்கு வெற்றியும், பணமும் பெருகும். உங்கள் பணத்தை எங்காவது முதலீடு செய்ய நினைத்தால், இந்த காலம் அதற்கு சாதகமானதாக இருக்கும். இந்த காலத்தில் அபரிமிதமான லாபம் காணலாம். பிறருடன் பழகும் போது பொறுமையை கடைபிடிக்கவும். மக்களிடம் அன்புடன் பேசினால் மட்டுமே பலன் கிடைக்கும்.


மகரம்:


மகர ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த ராசிக்கு பத்தாம் இடத்தில் இந்த சதுர்கிரஹி யோகம் உருவாகிறது. இது பணியிடம் மற்றும் வேலையின் ஸ்தானமாக கருதப்படுகிறது. இதனால் நீண்ட நாட்களாக புதிய வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்திலும் லாபம் உண்டு.


கும்பம்:


துலாம் ராசியில் உருவாகும் இந்த சதுர்கிரஹி யோகம் கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். இந்த ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இந்த யோகம் அமைவதால் வெளியூர் பயணங்கள் செல்ல வாய்ப்[உ கிடைக்கும். இந்த பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். இந்த யோகத்தின் போது கும்ப ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகள் இந்த காலத்தில் முடிக்கப்படும். வெளியூர் பயணம் செய்வதற்கான முழு வாய்ப்புகள் த்ற்போது உள்ளன.


குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண ஆதரவு தற்போது கிடைக்கும். கோபப்படாமல் இருந்தால் அதிகப்படியான நன்மைகளை பெறலாம். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சூரியனின் ராசி மாற்றத்தால் இந்த ராசிகளின் வாழ்க்கை ஆகஸ்ட் 17 முதல் அமோகமாய் இருக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ