கிரக பெயர்ச்சி 2022: அடுத்த 4 மாதங்கள் ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட் தான்

கிரக பெயர்ச்சிகள் காரணமாக வரும் 4 மாதங்கள் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் மாதமாக இருக்கும் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 16, 2022, 09:21 AM IST
  • நிதி நிலைமை நிறைய நிம்மதியைத் தரும்.
  • பதவி கௌரவமும் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம்.
  • வியாபாரிகள் அதிக லாபம் பெறலாம்.
கிரக பெயர்ச்சி 2022: அடுத்த 4 மாதங்கள் ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட் தான் title=

ராசி பெயர்ச்சி 2022:  ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ராசியை மாற்றுகிறது. இதன் காரணமாக, கிரகங்கள் மற்றும் விண்மீன்கள் அமைப்பு மாறிக்கொண்டே இருக்கின்றன. இதன் அடிப்படையின் அனைத்து ராசிகளின் வாழ்க்கையில் நேரடி தாக்கம் ஏற்படுகிறது. அடுத்த 4 மாதங்களில், மூன்று கிரகங்களின் பெயர்ச்சிகள் காரணமாக சில ராசிகளின் நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். இது 4 ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை ஏற்படுத்தும். பெயர்ச்சி ஆகும் கிரகங்கள் புதன், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகும். ஆகஸ்ட் 21, 2022 அன்று, புதன் கிரகம் ராசியை மாற்றி கடகத்தில் நுழைய உள்ளது. அதன் பிறகு செவ்வாய் கிரகம் பெயர்ச்சி அடையும். இதனால் 4 மாதங்களுக்கு அபரிமிதமான பலன்களை தரும் அந்த ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.

பண மழையில் நனையும் 4 ராசிக்காரர்கள்

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த 4 மாதங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். இதுவரை முடங்கிக் கிடக்கும் அவரது பணிகள் இனி வேகமாக நடைபெறத் தொடங்கும். நெட்வொர்க் வளரும். நல்லவர்களுடனான தொடர்பு நன்மை தரும். பயணம் இருக்கும். தொழில் - வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். நிதி நிலை சாதகமாக இருக்கும். காதல் வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த 4 மாதங்கள் பண பலன்கள் அதிகம். வலுவான நிதி நிலைமை நிறைய நிம்மதியைத் தரும். பதவி கௌரவமும் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். வியாபாரிகள் அதிக லாபம் பெறலாம். ஒரு பெரிய ஆர்டரைப் பெறலாம் அல்லது புதிய வேலையைத் தொடங்கலாம்.

மேலும் படிக்க | Astro: பல தலைமுறைக்கான செல்வத்தை அள்ளித்தரும் கஜகேசரி யோகம்; பலன் பெறும் ராசி இது தான்!

துலாம்: துலாம் ராசிக்காரர்களின் தொழிலுக்கு இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும். அவர்களுக்கு புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். தொழிலை மாற்ற நினைத்தால் வெற்றி கிடைக்கும். இடம் மாற்றம் ஏற்படலாம். குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம். திருமணம் நிச்சயிக்கப்படலாம்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு வேலை, வியாபாரத்தில் ஆதாயம் கிடைக்கும். எந்தவொரு முக்கியமான வேலையிலும் வெற்றி பெறுவீர்கள். பணம் சாதகமாக இருக்கும். மதம் மற்றும் ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தேர்வு - நேர்காணலில் வெற்றி பெறுவீர்கள். அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News