சனியின் நிலை மாற்றம், ராசிகளில் அதன் தாக்கம்: அனைத்து கிரகங்களின் ராசி மாற்றங்களும், நிலை மாற்றங்களும் அனைத்து 12 ராசிகளின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. ஜூலை மாதம் சனி பகவான் வக்ர நிலைக்கு, அதாவது இயல்பு நிலைக்கு எதிரான நிலைக்கு மாறினார். தற்போது அக்டோபர் 23 ஆம் தேதி அவர் மகர ராசியில் மீண்டும் தனது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார். இதன் பலனும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் பம்பர் அதிர்ஷ்டம் காத்துக்கொண்டு இருக்கிறது. இந்த காலத்தில் இவர்களுக்கு சனி பகவானுடன் மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும். அக்டோபர் 23, ஞாயிற்றுக்கிழமை, சனி பகவான் மகர ராசியில் காலை 4:19 மணிக்கு தனது சொந்த ராசியான மகரத்தில் இயல்பு நிலைக்கு மாறினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிட சாஸ்திரப்படி சனியின் சஞ்சாரம் காரணமாக பல ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் நடந்துமுடியும். மகர ராசியில் சனியின் சஞ்சாரம் எந்த ராசிக்கு எந்த விதமான பலன்களை அளிக்கவுள்ளது என காணலாம். 


சனியின் சஞ்சாரத்தால் யாருக்கு என்ன பலன்? இங்கே காணலாம்: 


மேஷம்:


மேஷ ராசிக்காரர்களுக்கு இந்தப் பாதை வலி மிகுந்ததாக இருக்கும். பிரச்சனைகள் அதிகரிக்கலாம். இந்த நேரத்தில் கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. இல்லையெனில், நீங்கள் தகராறில் மாட்டிக்கொள்ளலாம். பணச் செலவு அதிகரிக்கும்.


ரிஷபம்:


ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் கஷ்டங்கள் நிறைந்ததாகவே இருக்கும். வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். செலவுகள் அதிகரிக்கும். இதுமட்டுமின்றி, குடும்ப மற்றும் நிதிப் பிரச்சனைகளாலும் ஒருவர் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும்.


மிதுனம்:


மிதுன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சோம்பலை விடுங்கள். தொடர்ந்து உடற்பயிற்சிசெய்யவும். வருமானம் கூடும். இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண லாபம் கிடைக்கும். 


கடகம்:


இந்த ராசிக்காரர்கள் சனியின் சஞ்சாரத்தால் வியாபாரத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வருமானம் குறையும், செலவுகள் அதிகரிக்கும். திருமண வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். பண இழப்பு போன்றவை ஏற்படலாம்.


சிம்மம்:


சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்தக் காலத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழிலில் நல்ல வாய்ப்புகளைப் பெறலாம். புத்திசாலித்தனமாக நடக்க வேண்டிய நேரம் இது. யார் வேண்டுமானாலும் தவறான அறிவுரை கூறலாம். இதனால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். நீதிமன்ற விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.


மேலும் படிக்க | சூரிய கிரகணம் 2022: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், நினைத்தது நடக்கும் 


கன்னி:


கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தொழில், வியாபாரம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். இந்த நேரத்தில் பல திட்டங்கள் தடைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் நலம் கெடும், செலவுகள் அதிகரிக்கலாம்.


துலாம்:


துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும். சில நல்ல வாய்ப்புகள் அமையும். இந்த நேரத்தில் வெளிநாடு செல்லும் ஆசை நிறைவேற அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. அதே நேரத்தில், ஒரு புதிய ஒப்பந்தம் வணிகத்தில் உறுதிப்படுத்தப்படலாம். காதல் துணையுடன் சில விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. காரணமின்றி வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.


விருச்சிகம்:


விருச்சிக ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் தொழிலில் பலன் பெறலாம். அதே நேரத்தில், வருமான அதிகரிப்புக்கான வாய்ப்புகளும் உள்ளன. உடன்பிறந்தவர்களுடன் உறவு மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இந்த நேரத்தில் வாக்குவாதங்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. இந்த நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்கவும்.


தனுசு:


சனியின் மாற்றத்திற்குப் பிறகு, இந்த ராசிக்காரர்கள் கண்டிப்பாக சற்று எச்சரிக்கையுடன் இருக்க  வேண்டும். தேவையற்ற செலவுகள் கூடும். வருமானம் மற்றும் சேமிப்பு இரண்டும் அதிகரிக்கும். இந்த நேரத்தில், உங்களையும் உங்கள் தாயின் ஆரோக்கியத்தையும் குறிப்பாக கவனித்துக் கொள்ளுங்கள். பொய் பேசுவதை தவிர்க்கவும்.


மகரம்:


இந்தக் காலத்தில் பல நன்மைகளைப் பெறலாம். இந்த நேரத்தில் நீண்ட நாட்களாக வாட்டி வதைத்த பிரச்சனைகளிலிருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். தகராறு தீரும் வாய்ப்பு உள்ளது. கடின உழைப்பில் எந்த குறையும் இருக்க வேண்டாம். சோம்பலில் இருந்து விலகி இருப்பது நல்லது. மூத்தவர்களுடன் நல்ல உறவைப் பேணுங்கள்.


கும்பம்:


இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் ஓட்டம் நிறைந்ததாக இருக்கும். செலவுகளும் அதிகரிக்கும். ஆரோக்கியத்திலும் பாதகமான விளைவுகள் ஏற்படும். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. ஆனால் பயணங்களால் அதிக செலவாகும். 


மீனம்:


மீன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில், கடின உழைப்பின் முழு பலனைக் காணலாம். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். காதலில் ஸ்திரத்தன்மை இருக்கும். குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் சுப முடிவுகள் கிடைக்கும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சுக்கிரனின் மாளவ்ய யோகத்தால் தீபாவளியை ஜாலியாக கொண்டாடும் ராசிகள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ