சூரிய கிரகணம் 2022: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், நினைத்தது நடக்கும்

Surya Grahan 2022: மேஷம், சிம்மம், கடகம், மீனம், தனுசு ஆகிய ராசிகளுக்கு இந்த கிரகணம் சுபமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் பணப் பலன்கள், கௌரவம், மரியாதை அதிகரிப்பு உள்ளிட்ட நன்மைகளை பெறுவார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 24, 2022, 10:15 AM IST
  • சிம்ம ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தால் பெரிதும் பலன் அடையப் போகிறார்கள்.
  • நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த பணிகள் நடந்துமுடியும்.
  • சிக்கியிருந்த பணம் திரும்பக் கிடைக்கும்.
சூரிய கிரகணம் 2022: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், நினைத்தது நடக்கும் title=

இன்று தீபாபளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. நாளை, அதாவது அக்டோபர் 25 அன்று சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணம் சுவாதி நட்சத்திரம் மற்றும் துலாம் ராசியில் நடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை சூரிய கிரகணமும், 2 முறை சந்திர கிரகணமும் நிகழும். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் மாதத்தில் இருந்தது. தற்போது, இரண்டாவது முறையாக நாளை நடக்கவுள்ளது. நாளை நடக்கவுள்ள சூரிய கிரகணம் இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் தெரியும். இது தவிர ஐரோப்பிய நாடுகள், வடகிழக்கு ஆப்பிரிக்கா நாடுகள், மற்றும் தெற்காசிய நாடுகளிலும் இது தெரியும் என்று கூறப்படுகின்றது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும் போது, சூரியனின் ஒளி பூமியை சென்று அடைய முடியாத நிலை ஏற்படும். அந்த வானியல் நிகழ்வு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

கிரகண காலத்தில் என்ன செய்தால் உசிதம்?

கிரகண காலத்தில் சுப நிகழ்ச்சிகள், அதற்கான திட்டமிடல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இறைவன் பெயரை உச்சரிப்பது, ஸ்தோத்திரங்களை சொல்வது நல்லது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகண நேரத்தில் வெளியே செல்லக்கூடாது. இந்த நேரத்தில்  கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோயாளியைத் தவிர, யாரும் எதையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது. கர்ப்பிணிப் பெண்கள் கத்தியைப் பயன்படுத்தக்கூடாது. 

சூரிய கிரகணம் 2022: எந்த ராசிகளுக்கு சுபமாக இருக்கும்?

மேஷம், சிம்மம், கடகம், மீனம், தனுசு ஆகிய ராசிகளுக்கு இந்த கிரகணம் சுபமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் பணப் பலன்கள், கௌரவம், மரியாதை அதிகரிப்பு உள்ளிட்ட நன்மைகளை பெறுவார்கள். பணிகள் வெற்றிகரமான நடைபெறும். 

மேலும் படிக்க | நாடு முழுவதும் தித்திக்கும் தீபாவளி கொண்டாட்டம்: களைகட்டும் தீப ஒளியின் குதூகலம் 

சிம்மம்: 

சிம்ம ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தால் பெரிதும் பலன் அடையப் போகிறார்கள். நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த பணிகள் நடந்துமுடியும். சிக்கியிருந்த பணம் திரும்பக் கிடைக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் அமையும். வேலையில் வெற்றி பெறுவீர்கள்.

கடகம்: 

கடக ராசிக்காரர்களின் தடைபட்ட பணிகள் தற்போது நடந்து முடியும். அனைத்து பணிகளிலும் வெற்றி உண்டாகும். வாகனங்கள், சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். 

மீனம்: 

மீன ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தால் பலன் பெறலாம். திடீரென்று எதிர்பாராத இடங்களிலிருந்து பணம் வந்து சேரும். இதன் மூலம், பல வகையான பணிகளும் நிறைவடையும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். வணிகத்தில் ஈடுபட்டுள்ள மீன ராசிக்காரர்கள் நல்ல லாபம் காணலாம்.

தனுசு: 

தனுசு ராசிக்காரர்களுக்கும் இந்த சூரிய கிரகணம் மங்களகரமானதாக அமையப் போகிறது. பல வழிகளில் பணம் பெறுவார்கள். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கும். இந்த நேரத்தில் பணியிடம், வியாபாரம் என அனைத்திலும் முன்னேற்றம் காணலாம். 

மேலும் படிக்க | சுக்கிரனின் மாளவ்ய யோகத்தால் தீபாவளியை ஜாலியாக கொண்டாடும் ராசிகள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News