குரு உதயம் பலன் 2023: கிரகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் ராசியையும் இயக்கங்களையும் மாற்றுகின்றன. வியாழன் கிரகனும் வருடத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றும். குரு பகவானாகிய வியாழன் கிரகம், அதிர்ஷ்டம், திருமணம் மற்றும் மகிழ்ச்சிக்கான காரணியாக கருதப்படுகின்றது. 2023-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி குரு பகவான் மீன ராசியிலிருந்து விலகி மேஷ ராசிக்குள் நுழைந்தார். அதன்படி தேவகுரு பிருஹஸ்பதி ஒரு ராசி சுழற்சியை முடித்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு ராசிகளில் முதல் ராசியான மேஷத்தில் நுழைந்தார். அதேசமயம் ஏப்ரல் 27 ஆம் தேதி குரு உதயமானார். அத்தகைய சூழ்நிலையில், குரு தனது நிலையை மாற்றும் போதெல்லாம், அதன் தாக்கம் சில ராசிக்காரர்களின் வாழ்வில் காணப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷத்தில் குரு உயதமாகிள்ளது, அனைத்து ராசிக்காரர்ககளின் வாழ்க்கையில் தெரியும். ஆனால் 3 ராசிக்காரர்கள் அடுத்த ஒரு வருடத்திற்கு வரை அளவிலா பணம் மழை கொட்டித் தீர்க்கும். இந்த நிலையில் இந்த ராசிக்காரர்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


பூச நட்சத்திரத்தில் குரு பகவான் உதயமானது இந்த ராசிக்காரர்களின் தலைவிதியை மாற்றும்


மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: தொழில்களில் சிறப்பான பலனை பெறப்போகும் இந்த 5 ராசிகள்


மேஷ ராசி: ஜோதிட சாஸ்திரப்படி இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த ஒரு வருடம் பொருளாதார ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும், அதேபோல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். குரு பகவான் உங்கள் ராசியின் லக்னத்தில் உதித்திருக்கிறார். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அதே சமயம் நோய் எதிர்ப்பு சக்தியும் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நேரத்தில் பொருளாதார நன்மைகளும் இருக்கும். மாணவர்களுக்கும் இந்தக் காலம் அருமையாக இருக்கும். கூட்டாண்மையில் வேலை செய்பவர்களுக்கு இந்த நேரம் சிறப்பாக இருக்கும்.


கடக ராசி: கடக ராசிக்காரர்களுக்கு இந்த முழு ஆண்டு சாதகமான பலன்களைத் தரும். குரு பகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் உதிக்கப் போகிறார். இது மட்டுமின்றி அடுத்த ஒரு வருடமும் இங்கு அமர்ந்திருக்கப் போகிறார். இந்த நேரத்தில் வேலை மற்றும் வியாபாரத்தில் தங்க வெற்றி கிடைக்கும். இந்த காலகட்டத்தில் வியாபாரம் விரிவடையும். வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.


தனுசு ராசி: ஜோதிட சாஸ்திரப்படி, குரு மேஷ ராசியில் உதயம் தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல பலனைத் தரும். குரு பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் உதயமாகிறார். அத்தகைய சூழ்நிலையில், உங்களின் குழந்தைகள் இந்த நேரத்தில் முன்னேற்றம் பெற முடியும். மறுபுறம், உங்கள் வேலைகளில் ஏதேனும் நீண்ட காலமாக தடைபட்டிருந்தால், இந்த காலகட்டத்தில் நிறைவேறும். இதன் போது, குருவின் அருளால் மகிழ்ச்சியும் செழிப்பும் கிடைக்கும். தற்செயலான பண ஆதாயம் ஏற்படலாம். இதுமட்டுமின்றி, இந்த நேரத்தில் வீட்டில் ஏதேனும் மதம் அல்லது சுப நிகழ்ச்சிகளில் நீங்கள் பங்கேற்கலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இன்றைய ராசிபலன் - குருவின் அருளால் அதிஷ்டம் பெரும் ராசிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ