சனி வக்ர நிவர்த்தி, ராசிகளில் அதன் தாக்கம்: சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் பலன்களை அளிக்கிறார். ஒருவருக்கு சனி பகவானின் அருள் இருந்தால், அந்த நபரின் வாழ்க்கையில் எந்த குறையும் இருக்காது. அவருக்கு அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும், மகிழ்ச்சி மழையாய் பொழியும். அதே சமயம், சனி பகவானின் கோவ பார்வை ஒருவர் மீது பட்டால், அவர் பல வித பிரச்சனைகளை எதிகொள்ள வேண்டி வரக்கூடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிடத்தில் சனி பலவானுக்கு மிக அதிக முக்கியத்துவம் உள்ளது. அவரது பெயர்ச்சிகளும் (Sani Peyarchi), நிலைகளும், இயக்கங்களும் பல வித மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அனைத்து கிரகங்களையும் விட சனி பகவான் மிக மெதுவாக நகரும் கிரகமாக இருக்கிறார். ஒவ்வொரு ராசியிலும் அவர் இரண்டரை ஆண்டுகளுக்கு தங்கி இருப்பதால், ராசிகளில் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கிறது. 


கும்பத்தில் சனி பகவான்


தற்போது சனிபகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் உள்ளார். அவர் நவம்பர் 4 ஆம் தேதி வகர் நிவர்த்தி அடைவார். சனி பகவானின் வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலு காணப்படும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் அற்புதமான நற்பலன்கள் ஏற்படும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


மேஷ ராசி


மேஷ ராசிக்காரர்களுக்கு சனி கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதால், மிகுந்த நன்மைகள் உண்டாகும். ப்ராபர்டி சம்பந்தமான தொழிலில் ஈடுபடுபவர்கள் அபரிமிதமான செல்வத்தைப் பெறுவார்கள். இவர்கள் எடுத்த அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக நிறைவடையும். அனைத்திலும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறை இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சமுதாயத்தில் மரியாதை கூடும். பணவரவு அதிகரிக்கும்.


மேலும் படிக்க | வக்ரம் ஆனாலும் வரத்தை அளிக்கொடுக்கப்போகும் குரு - இந்த ராசிகளுக்கு மட்டும்


மிதுன ராசி


மிதுன ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். நீங்கள் ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதிலிருந்தும் இப்போது விடுபடுவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு புதிய திட்டத்தை உருவாக்கலாம், அது எதிர்காலத்தில் பலனைத் தரும். சொத்து வாங்குதல் மற்றும் விற்பதில் இப்போது அதிக லாபம் உண்டாகும்.


சிம்ம ராசி


அனைத்து முடிவுகளும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இத்தனை நாட்களாக தடைப்பட்டிருந்த வேலைகளை இப்போது செய்து முடிக்கலாம். பண வரவு அதிகமாக இருக்கும். கடன் இருந்தால் கடனில் இருந்து விடுதலை கிடைக்கும். வீடு மற்றும் அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். 


துலாம் ராசி: 


சனி பகவானின் வக்ர நிவர்த்தி துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். சனி உங்களுக்கு சுகபோகங்களைத் தருவார். சொத்து, வாகனம் வாங்கும் யோகம் இப்போது உண்டாகும். எதிர்பாராத இடங்களிலிருந்து திடீர் பண வரவு இருக்கும். உங்கள் நிதி நிலை மிகவும் நன்றாக இருக்கும். சமூகத்தில் மரியாதையும் கௌரவமும் அதிகரிக்கும்.


தனுசு ராசி


ரியல் எஸ்டேட் துறையில் பணிபுரியும் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். லாபம் அதிகரிக்கும். இது முதலீட்டிற்கு ஏற்ற காலமாக இருக்கும். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் காணலாம். புதிய திட்டங்களை உருவாக்கி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் மேல் அதிகாரிகளுடன் நல்லுறவு இருக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.


பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.


மேலும் படிக்க | சிம்மத்தில் வாசம் செய்யும் சூரியனின் அருளால் ‘இந்த’ ராசிகளுக்கு புரட்டாசி வரை ராஜயோகம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ