சிம்மத்தில் வாசம் செய்யும் சூரியனின் அருளால் ‘இந்த’ ராசிகளுக்கு புரட்டாசி வரை ராஜயோகம்!

Sun Transit in Leo: சூரியக் கடவுள் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார். சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறார். இம்முறை சூரியபகவான் சிம்ம ராசியில் செப்டம்பர் 17ஆம் தேதி வரை தங்கப் போகிறார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 25, 2023, 04:13 PM IST
  • பொருளாதார நிலையில் நிறைய முன்னேற்றம் காண்பீர்கள்.
  • வீட்டில் நிலவும் பதற்றம் குறையும்.
  • சூரியபகவானின் அருளால் தொழில், வியாபாரம் போன்றவற்றில் பலன்கள் கிடைக்கும்.
சிம்மத்தில் வாசம் செய்யும் சூரியனின் அருளால் ‘இந்த’ ராசிகளுக்கு புரட்டாசி வரை ராஜயோகம்! title=

சிம்ம ராசியில் சூரிய சஞ்சாரம்: இந்து மதத்தின் படி, சூரியக் கடவுள் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார். யாருடைய ஜாதகத்தில் சூரியபகவான் சாதகமான நிலையில் நுழைகிறாரோ அந்த ராசிக்காரர்கள் தந்தை மற்றும் முதலாளியுடன் எப்போதும் நல்லுறவைக் கொண்டிருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி இவர்களுக்கு எப்போதும் அரசு வேலை கிடைக்கும். சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறார். அப்படிப்பட்ட நிலையில் இம்முறை சூரியபகவான் சிம்ம ராசியில் பிரவேசித்துள்ளார்.

செப்டம்பர் 17ம் தேதி வரை சூரியன் சிம்ம ராசியில் இருக்கப் போகிறார். இதனால், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் சூரியனின் ராசி மாற்றத்தால் அபரிமிதமான பலன்களைப் பெறப் போவதோடு, அபரிமிதமான செல்வச் செழிப்பில் திளைப்பார்கள். எனவே சூரியனின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம். சூரியன் சிம்மத்தில் வாசம் செய்யும் நிலையில் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு புரட்டாசி வரை ராஜயோக பலன்களை அனுபவிப்பார்கள்.

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு சூரிய பகவானின் பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், இம்முறை சூரியபகவான் தனுசு ராசியின் ஒன்பதாம் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அதனால் தான் தனுசு ராசிக்காரர்கள் இந்த நாட்களில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறப் போகிறார்கள். இதன் மூலம், உங்கள் தடைபட்ட வேலைகள் அனைத்தும் இந்த நாட்களில் முடிவடையும். இந்த கால கட்டத்தில், நீங்கள் எந்த விதமான அதிகாரபூர்வ பயணத்திற்கும் செல்லலாம். அது உங்களுக்கு மிகவும் சாதகமாக அமையப் போகிறது. சூரியபகவானின் அருளால் தொழில், வியாபாரம் போன்றவற்றில் பலன்கள் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வருமானம் பெருகும், பல இடங்களில் இருந்து பணம் வரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதுமணத் தம்பதிகள் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பார்கள்.

கடக ராசி

கடக ராசி அன்பர்களுக்கு சூரிய பகவானின் ராசி மாற்றம் பலன் தரும். ஏனெனில், இந்த முறை சூரியபகவான் உங்கள் ராசியில் இரண்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால், உங்களின் பொருளாதார நிலையில் நிறைய முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் பணம் எங்காவது கைக்கு வராமல் சிக்கியிருந்தால், அதுவும் விரைவில் கிடைக்கும். வீட்டில் நிலவும் பதற்றமும் குறையும். சூரியனின் ராசி மாற்றம் ஊடகம், தகவல் தொடர்பு மற்றும் சந்தைப்படுத்தல் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு சாதகமாக இருக்கும். சூரியனின் ராசி மாற்றம் பெரும் வெற்றியைத் தரும். அதிர்ஷ்டம் எப்போதும் உங்களுடன் இருக்கும். நீங்கள் ஒரு முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம். நன்மை உண்டாகும். 

துலாம் ராசி

சூரிய பகவானின் சஞ்சாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில், சூரியபகவான் உங்கள் ராசியில் வருமான வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த நாட்களில், உங்கள் பணித் துறையில் மிகப் பெரிய வளர்ச்சி காணப்படும். தொழிலில் தொடர்புடையவர்கள் இந்த நாட்களில் சிறந்த வாய்ப்புகளைப் பெறலாம். வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் பல பிரச்சனைகள் தீரும். தொழிலை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வீர்கள். தனிப்பட்ட உறவுகள் சிறப்பாக இருக்கும். சொத்து - வாகனம் எடுக்கலாம்.  குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் கை கூடும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும்... அட்டகாசமான நற்பலன்கள் கைகூடும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News