சூரிய பெயர்ச்சி: வேத ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் உள்ளது. கிரகங்களின் ராசி மாற்றமும் மிகவும் முக்கிய நிகழ்வாக காணப்படுகின்றது. அந்த வகையில் சூரியனின் ராசி மாற்றமும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சூரியனின் ராசி மாற்றம் அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கிறது. 16 ஜூலை 2022, சனிக்கிழமை, சூரியன் கடக ராசிக்குள் நுழைந்தார். ஆகஸ்ட் 17 வரை அவர் இந்த ராசியில் இருப்பார். கடக ராசியில் சூரியன் பெயர்ச்சி ஆனதால் சில ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பலன் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிஷபம்:


சூரியன் ரிஷப ராசியில் மூன்றாவது வீட்டில் பெயர்ச்சியாகியுள்ளார். இந்த மாற்றத்தால் தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். இந்த நேரத்தில் பல விஷயங்களில் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். சகோதர சகோதரிகளின் முழு ஆதரவும் கிடைக்கும். பணி நடை மேம்படும். உயர் அதிகாரிகள் உங்களின் பணியால் மகிழ்ச்சி அடைவார்கள். பணியிடத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். 


சிம்மம்:


சிம்ம ராசியின் ஆவது வீட்டில் சூரியன் பெயர்ச்சியாகியுள்ளார். இந்த நேரத்தில் வெளியூர் பயணம் செல்லக்கூடும். இந்த பயணங்களால் அதிகப்படியான லாபத்தை அனுபவிப்பீர்கள். வியாபாரிகள் தங்கள் விருப்பப்படி லாபம் பெறலாம். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு சாதகமான காலமாக இது இருக்கும். மாணவர்களுக்கு இது லாபகரமான காலம். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான உறவு வலுவாக இருக்கும். குறிப்பாக தந்தையின் ஆதரவைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில், நீங்கள் துறையில் மூத்த அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.


மேலும் படிக்க | சனியின் 'வக்ர பார்வை' : 2023 வரை மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில ராசிகள்! 


கன்னி:


சூரியன் கன்னி ராசிக்கு ம் வீட்டில் சஞ்சரித்துள்ளார். சூரிய பகவானின் அருளால் கன்னி ராசிக்காரர்களுக்கு வருமானம் கூடும். உத்தியோகத்தில் சாதகமான பலன்கள் காணப்படும். இந்த சமயத்தில் உங்கள் கௌரவம் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வலுவான ஆதரவு கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்கள் வெற்றி பெறலாம். இந்த நேரத்தில் உங்கள் குடும்ப சூழ்நிலை இனிமையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவுகள் வலுவாக இருக்கும். 


மேலும் படிக்க | சிம்மத்தில் புதன்: இந்த 3 ராசிகளுக்கு செல்வம் கொழிக்கும், வெற்றி கிடைக்கும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ