சிம்மத்தில் புதன்: இந்த 3 ராசிகளுக்கு செல்வம் கொழிக்கும், வெற்றி கிடைக்கும்

Mercury Transit:ஆகஸ்ட் 1 ஆம் தேதி புதன் கிரகம் சிம்ம ராசியில் பிரவேசித்துள்ளது. புதன் சஞ்சாரத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 4, 2022, 10:35 AM IST
  • ஜோதிட சாஸ்திரப்படி புதன் மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும்.
  • நிதிக் கண்ணோட்டத்தில் நேரம் நன்றாக இருக்கிறது.
  • சிக்கியிருந்த பணம் இப்போது மீண்டும் கிடைக்கும்.
சிம்மத்தில் புதன்: இந்த 3 ராசிகளுக்கு செல்வம் கொழிக்கும், வெற்றி கிடைக்கும் title=

ஜோதிடத்தில், புதன் கிரகம் அனைத்து கிரகங்களுக்கும் இளவரசனாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் புதன் கிரகத்தின் நிலை ஒரு நபரின் ஆளுமை, பேச்சு, வணிகம் மற்றும் தொடர்புத் திறன் ஆகியவற்றை பாதிக்கிறது என்று நம்பப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி ஆகஸ்ட் 1 ஆம் தேதி புதன் கிரகம் சிம்ம ராசியில் பிரவேசித்துள்ளது. ஆகஸ்ட் 21 வரை புதன் இந்த ராசியில் இருப்பார். ஜோதிடத்தின் படி, புதனின் இந்த ராசி மாற்றம் பல ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த புதன் சஞ்சாரத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

மேஷம்

ஜோதிட சாஸ்திரப்படி புதன் மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். இந்த சமயத்தில் மேஷ ராசிக்காரர்கள் களத்தில் வெற்றி பெறுவார்கள். கல்வியுடன் தொடர்புடையவர்கள் போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறுவார்கள். இந்த நேரத்தில் உங்கள் குடும்ப சூழ்நிலை இனிமையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவுகள் வலுவாக இருக்கும். 

நிதிக் கண்ணோட்டத்தில் நேரம் நன்றாக இருக்கிறது. சிக்கியிருந்த பணம் இப்போது மீண்டும் கிடைக்கும். இந்த நேரத்தில் உங்கள் சிந்தனைத் திறனும் மேம்படும், உங்கள் துறையில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள்.

மேலும் படிக்க | சிம்மத்தின் இணையும் சூரியன் - சுக்கிரன்; இந்த ‘4’ ராசிகளின் பொற்காலம் ஆரம்பம்! 

ரிஷபம்

சிம்ம ராசியில் புதன் நுழைவது ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக இருக்கும். இந்த கலாத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு அவர்களின் வேலை மற்றும் தொழிலில் அமோக வெற்றி கிடைக்கும். பதவி, கௌரவம் உயரும். புதனின் ராசி மாற்றத்தால் உங்களின் திறமை மேம்படும் மற்றும் உங்கள் பேச்சால் மற்றவர்களை கவர முடியும். 

உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான உறவு வலுவாக இருக்கும். குறிப்பாக தந்தையின் ஆதரவைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில், நீங்கள் துறையில் மூத்த அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

சிங்கம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் ராசி மாறுவதால் நன்மைகள் உண்டாகும். புதனின் ராசி மாற்றத்தால் உங்களுக்கு நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட ஆதாரங்களில் இருந்து பணம் பெறலாம். இந்த காலகட்டத்தில் வியாபாரம் செய்பவர்களும் அதிகப்படியான தொகையை ஈட்ட முடியும். 

நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், அதற்கு இந்த நேரம் சாதகமானதாக இருக்கும். கலைத் துறையுடன் தொடர்புடையவர்கள் தங்கள் படைப்பின் மூலம் பணம் சம்பாதிப்பார்கள். திருமணமான தம்பதிகளுக்கு இடையே மகிழ்ச்சியும் அன்பும் கூடும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கு. 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | ஆகஸ்டில் கிரகங்களின் ராசி மாற்றத்தால் இந்த ராசிகளுக்கு எக்கச்சக்க ஏற்றம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News