செவ்வாயின் மாற்றத்தால் இந்த ராசிகளுக்கு தலைவிதி மாறும்: வெற்றியும் செல்வமும் சேரும்
Mars Transit: ஜூன் 27-ம் தேதி மேஷ ராசியில் செவ்வாயின் பெயர்ச்சியும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, இந்த செவ்வாய் பெயர்ச்சி 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும்.
செவ்வய் ராசி பரிவர்த்தனை 2022: நிலம், தைரியம், வலிமை, திருமணம், சகோதரன் ஆகியவற்றின் காரணியான செவ்வாய் ஜூன் 27 அன்று ராசியை மாற்றப் போகிறார். ஜோதிடத்தில் செவ்வாய் கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படுகிறார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதி செவ்வாய். செவ்வாய் கிரகத்தின் ராசி மாற்றம் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களை பாதிக்கிறது.
ஜூன் 27-ம் தேதி மேஷ ராசியில் செவ்வாயின் பெயர்ச்சியும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, இந்த செவ்வாய் பெயர்ச்சி 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும்.
செவ்வாயின் ராசி மாற்றம் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை ஒளிரச்செய்யும்
மிதுனம்:
செவ்வாயின் சஞ்சாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கும். அவர்களின் பொறுப்புகள் கூடும். பணம் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. உழைக்கும் வகுப்பினருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
தொழிலதிபர்களுக்கும் இந்த நேரம் அதிக லாபம் தரும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். திருமணமான தம்பதிகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவை பெறுவீர்கள்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு மேஷ ராசியில் செவ்வாய் பிரவேசம் செய்வது மிகவும் நல்லதாக இருக்கும். பல இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். தைரியம் அதிகரிக்கும். வியாபாரம் செய்வபவர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
மேலும் படிக்க | சனீஸ்வரருக்கு கோபம் ஏற்படுத்தும் செயல்கள்: இதை கண்டிப்பாக செய்ய வேண்டாம்
குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒத்துழைப்பும் நிறைந்த சூழல் நிலவும். கல்வியுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் சிறப்பாக இருக்கும். தொடர்ந்து கடினமாக உழைத்து வெற்றி பெறுவீர்கள். படிப்பில் கவனம் அதிகரிக்கும்.
விருச்சிகம்:
செவ்வாய் சஞ்சாரம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு தைரியத்தையும் நம்பிக்கையையும் அதிகரிக்கும். அதன் அடிப்படையில் ஒவ்வொரு பணியையும் எளிதாக செய்து முடிப்பார்கள். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், மகிழ்ச்சி அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். போதிய அளவு பணம் கிடைக்கும். அதன் காரணமாக நிதி பிரச்சனைகள் நீங்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் சஞ்சாரம் பல விஷயங்களில் நல்ல பலன்களைத் தரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, நீங்கள் மகிழ்ச்சியையும் அமைதியையும் அனுபவிப்பீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | புதனின் ராசி மாற்றத்தால், இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், செல்வம் பெருகும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR