செவ்வாய் ராசி மாற்றம்: ஜூன் 27 முதல் இந்த ராசிகள் மீது பண மழை, தொட்டது துலங்கும்

Mars Transit: ஜூன் 27-ம் தேதி செவ்வாய் தனது சொந்த ராசியான மேஷ ராசிக்குள் நுழைகிறார். செவ்வாயின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 17, 2022, 11:53 AM IST
  • செவ்வாயின் ராசி மாற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையப் போகிறது.
  • இந்த காலகட்டத்தில் உங்கள் தொழிலில் நல்ல பலன்களை காண்பீர்கள்.
  • பணியிடத்தில் உங்களுக்கு கௌரவமும் மதிப்பும் கிடைக்கும்.
செவ்வாய் ராசி மாற்றம்: ஜூன் 27 முதல் இந்த ராசிகள் மீது பண மழை, தொட்டது துலங்கும் title=

மேஷத்தில் செவ்வாயின் பெயர்ச்சி: செவ்வாய் சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படுகிறது. ஜூன் 27-ம் தேதி செவ்வாய் தனது சொந்த ராசியான மேஷ ராசிக்குள் நுழைகிறார். செவ்வாயின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும். 

எனினும், சில ராசிக்காரர்கள் இந்த ராசி மாற்றத்தால் அளப்பரிய பலன்களைப் பெற உள்ளார்கள். ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை செவ்வாய் இதே நிலையில் இருப்பார். மேலும் சில ராசிக்காரர்கள் இந்தக் காலத்தில் சிறப்பான பணப் பலன்களைப் பெறப் போகிறார்கள். செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளை ஆட்சி செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் பலன் கிடைக்கும்

மேஷம்:

செவ்வாயின் ராசி மாற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையப் போகிறது. இந்த காலகட்டத்தில் உங்கள் தொழிலில் நல்ல பலன்களை காண்பீர்கள். அதே நேரத்தில், நீங்கள் கூட்டுப்பணியில் இருந்தால், இந்த காலகட்டத்தில் நீங்கள் நல்ல லாபத்தைப் பெறலாம். 

செவ்வாய் கிரகத்தின் இந்த பெயர்ச்சி பணியில் இருப்பவர்களுக்கும் நன்மை பயக்கும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். சொந்த வாழ்க்கையிலும் நல்ல திருப்பங்களை காண்பீர்கள். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். 

மேலும் படிக்க | Lakshmi Narayana Yogam: லக்ஷ்மி நாராயண யோகத்தினால் காதலில் செல்வாக்கு பெறுபவர்கள் 

மிதுனம்:

ஜோதிட சாஸ்திரத்தின் படி, மிதுன ராசியினருக்கும் செவ்வாயின் இந்த பெயர்ச்சி நல்ல பலன்களை அளிக்கும். உத்தியோகத்தில் ஆதாயம் உண்டாகும். அதே நேரத்தில், வருமானத்திற்கான பல வழிகள் திறக்கப்படும். வருமானம் அதிகரிக்கும். 

பணியிடத்தில் உங்களுக்கு கௌரவமும் மதிப்பும் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் பதவி உயர்வுக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. 

சிம்மம்:

இந்த நேரத்தில் சிம்ம ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரம் இரண்டிலும் வெற்றிக்கான வாய்ப்பை பெறுவார்கள். இந்த நேரம் முதலீட்டிற்கு மிகவும் சாதகமானதாக இருக்கும். வருமானம் கூடும். ஒன்றல்ல பல இடங்களில் இருந்து பண வரவு இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும்.

துலாம்:

துலா ராசிக்காரர்கள் கூட்டாண்மையில் வேலை செய்தால் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சம்பளம் வாங்குபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இந்த காலம் தொழிலுக்கு ஏற்ற காலமாகும். ஆனால் துலா ராசிக்காரர்கள் காதல் விவகாரங்களில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் / மனைவி, குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். நண்பர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த  தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சூரியனின் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு இக்கட்டான நேரம், ஜாக்கிரதை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News