சுக்கிரன் அருளால் இந்த ராசிகள் மீது பண மழை: மகிழ்ச்சி பன்மடங்காகும்
Venus Transit: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகள் மீது கூடுதல் அருளைப் பொழிவார் சுக்கிரன்.
Venus Transit: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட காலகட்டத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இந்த கிரக மாற்றங்கள் கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. மகிழ்ச்சி, செழிப்பு, வளமை, வாகனம், பணம், வசதி, கலை, ஆகியவற்றின் காரணி கிரகமாக இருக்கும் சுக்கிரன் பிப்ரவரி 12ஆம் தேதி மகர ராசியில் பெயர்ச்சி ஆனார். மகர ராசி ஒரு இயல்பான ராசியாக பார்க்கப்படுகிறது. மகரத்தில் சுக்கிரனின் பெயர்ச்சி பொதுவாக அனைத்து ராசிக்காரர்களையும் நல்லொழுக்கம் உள்ளவர்களாகவும் விசுவாசிகளாகவும் உழைப்பாளிகளாகவும் உயர்த்தும்.
சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகள் மீது கூடுதல் அருளைப் பொழிவார் சுக்கிரன். இந்த ராசிக்காரர்களுக்கு அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்
மேஷம் (Aries)
மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி அற்புதமான நற்பலன்களை அளிக்கும். சுக்கிரன் அருளால் உங்கள் பண வரவு அதிகமாகும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் திறக்கும். வணிகத்தில் ஈடுபட்டுள்ள மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலம் லாபகரமானதாக இருக்கும். சுகமான பல செய்திகளை கேட்பீர்கள். நிதிநிலை முன்னேற்றம் காணும். வாழ்க்கைத் துணையுடன் உங்கள் உறவு நன்றாக இருக்கும்.
ரிஷபம் (Taurus)
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகமாகும். இந்த காலத்தில் பணியில் மிகப்பெரிய முன்னேற்றத்தை காண்பீர்கள். ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்வீர்கள். இதனால் உங்களுக்கு பலவித நன்மைகள் ஏற்படும். இந்த காலத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு இப்போது கிடைக்கும். உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேற பல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்க திட்டமிட்டுள்ளவர்கள் இந்த காலத்தில் அதை செய்யலாம்.
கன்னி (Virgo)
கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி பல பலன்களை அளிக்கும். ஆன்மீகம் தொடர்பான சிந்தனையில் அதிக நாட்டம் ஏற்படும். பணியிடத்தில் மாற்றத்தை காண்பீர்கள். நிதிநிலை நன்றாக இருக்கும் எதிர்பாராத இடங்களில் இருந்து பணவரவு இருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு இப்பொழுது லாபகரமான காலமாக இருக்கும். முதலீடு செய்ய இது சரியான நேரமாக இருக்கும். இப்போது செய்யப்படும் முதலீட்டால் எதிர்காலத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுக்கிரன் உங்கள் வாழ்வில் செல்வச் செழிப்பை அதிகரிப்பார்.
துலாம் (Libra)
சுக்கிரன் பெயர்ச்சி துலா ராசிக்காரர்களுக்கு சுபமானதாக இருக்கும். சந்தோஷமான நிறைவான மனநிலையுடன் இருப்பீர்கள். பணியிடத்தைப் பற்றி பேசினால் இந்த காலம் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள துலா ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும். நேர்மறையான எண்ணத்துடன் செயல்படுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | குபேர சிலையை தவறுதலா கூட இந்த திசையில் வைக்காதீங்க.. தரித்திரம் ஏற்படலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ