புதன் பெயர்ச்சி: இன்னும் 3 நாட்களில் இந்த ராசிகளுக்கு அட்டகாசமான ராஜயோகம் ஆரம்பம்

Mercury Transit: புதன் கிரகத்தின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தும். எனினும் சிலருக்கு இந்த புதன் பெயர்ச்சியால் தலைவிதி மாறும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 17, 2024, 06:12 PM IST
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சி அற்புதமாக இருக்கப் போகின்றது.
  • இந்த காலத்தில் நல்ல நண்பர்களை பெறுவீர்கள்.
  • நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பரிபூரண ஒத்துழைப்பு கிடைக்கும்.
புதன் பெயர்ச்சி: இன்னும் 3 நாட்களில் இந்த ராசிகளுக்கு அட்டகாசமான ராஜயோகம் ஆரம்பம் title=

Mercury Transit: ஜோதிட சாஸ்திரப்படி புதன் கிரகம் கிரகங்களின் இளவரசராக கருதப்படுகிறார். புதன், புத்திசாலித்தனம், சமயோசித புத்தி, கல்வி, திறமை, அறிவாற்றல், தர்க்கம், விவாதம், வெற்றி, பேச்சாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ளார். 2024 பிப்ரவரி 20 ஆம் தேதி 5:48 மணிக்கு அவர் பெயர்ச்சியாக உள்ளார்.

பொதுவாக அனைத்து கிரகங்களின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். புதன் கிரகத்தின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தும். எனினும் சிலருக்கு இந்த புதன் பெயர்ச்சியால் தலைவிதி மாறும். இவர்களுக்கு அதிகப்படியான அதிர்ஷ்டம் கிடைக்கும். இவர்கள் வாழ்வில் செல்வ செழிப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சியின் உச்சம் தொடுவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

ரிஷபம் (Taurus)

ரிஷப ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சி மிகவும் நல்ல பலன்களை அளிக்க போகின்றது. புதனின் ராசி மாற்றம் ரிஷப ராசிக்காரர்களின் வருமானத்தை அதிகரிக்கும். இப்போது வாகனம் மற்றும் சொத்து வாங்குவதற்கான யோகம் உருவாகி வருகிறது. பண இருப்பை உருவாக்குவதில் இப்போது அதிகமாக கவனம் செலுத்துவீர்கள். உங்கள் பணியிடத்தில் உங்கள் இலக்குகளை அடைவீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். பொருளாதார நிலை திடமாக இருக்கும். இந்த பெயர்ச்சியின் காரணத்தால் நீங்கள் பல பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த பயணங்களால் உங்களுக்கு அனுகூலமான நன்மைகள் உருவாகும். வெளிநாடுகளுக்கு செல்லவும் வாய்ப்பு கிடைக்கும். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | உதயமாகிறார் சனி: இந்த ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம்.. பணம், புகழ், பதவி வந்து சேரும்

மிதுனம் (Gemini)

புதனின் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் வகையில் இருக்கும். எதிர்பாராத இடங்களில் இருந்து பணவரவு இருக்கும். வாழ்க்கையிலும் இந்த பெயர்ச்சியால் உங்களுக்கு நல்ல செய்திகள் பல கிடைக்கும். நீண்ட தூர பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். இதனால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பரிபூரணமான ஒத்துழைப்பு கிடைக்கும். குழந்தை வரம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு இப்பொழுது குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த பெயர்ச்சி காரணமாக உங்கள் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிதிநிலை நன்றாக இருக்கும். உங்கள் இலக்குகளை வெற்றிகரமாக எட்டுவீர்கள். பணியிடத்தில் திருப்தியும் மகிழ்ச்சியும் இருக்கும்.

சிம்மம் (Leo)

சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சி அற்புதமாக இருக்கப் போகின்றது. இந்த காலத்தில் நல்ல நண்பர்களை பெறுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பரிபூரண ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகப் பணிகளில் இருப்பவர்களுக்கு இப்போது நேரம் நன்றாக உள்ளது. பல முக்கிய முடிவுகளில் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதிவு உயர்வும் கிடைக்கும். உங்களுடன் பணிபுரிபவர்கள் மற்றும் மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். வணிகத்தில் ஈடுபட்டுள்ள சிம்ம ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

துலாம் (Libra)

துலா ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சி பல செய்திகளை கொண்டு வரும். நிதிநிலை நன்றாக இருக்கும். பல பயணங்களை மேற்கொள்ள நேரிடும். பணி இடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் பணியில் முழுமையாக கவனம் செலுத்துவீர்கள். இந்த காலத்தில் கடின உழைப்பின் பயன் முழுமையாக கிடைக்கும். வணிகத்தில் ஈடுபட்டுள்ள துலா ராசிக்காரர்களுக்கு லாபம் கிடைக்கும். வணிகம் நிமித்தமாக வெளிநாட்டு பயணம் சென்று வர வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் முன்னேற பல வாய்ப்புகள் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கும்பத்தில் புத ஆதித்ய ராஜயோகம்... 4 ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News